bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 29 மே, 2016

மோசடி ஆணையமா டிஎன்பிஎஸ்சி?



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் முதல்மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்டகாவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்துப் பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழகத்தில் இதை நம்பி அரசுப் பணிக்கு செல்ல முடியும்; அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், படித்து முடித்த ஒரு கோடிப் பேர் வேலை கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

வேலையின்மை மிகப் பெரும் சமூகப் பிரச்சனையாக மாறியுள்ள இன்றைய சூழலில், தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசுப் பணிக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கான சிறப்புப் பயிற்சி மையங்களிலும், லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவுபகலாக பயின்று வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒரு நேர்மையான அமைப்புதானா என்பது இன்று பெரும் கேள்வியாகவும் மாறியுள்ளது.

ஊழல்களும் மோசடிகளும் நடைபெறும் ஆணையமாக மாறிவிட்டது என்றுசந்தேகம் வரும் அளவுக்கு அதன் செயல்பாடுகளில் குளறுபடிகள் நீடிக்கின்றன.

கடந்த 2014 டிசம்பர் 21ம்தேதி குரூப்4க்கான தேர்வுகள் நடைபெற்று முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. மதிப்பெண்கள் அடிப்படையில் முதற்கட்ட நேர்முகத் தேர்வு நடந்து முடிந்துள்ளது.

 தற்போது இரண்டாம் கட்ட நேர்முகத் தேர்வு 6.5.2016க்கு மேல் நடைபெறும் என்ற அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது.

இதன் விபரம் குறித்த அட்டவணை இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.அதிலே மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களையும் நேர்முகத் தேர்வுக்குஅழைத்துள்ளார்கள். 
ஆனால் உண்மையாக இரவு பகலாக நம்பிக்கையோடு படித்து அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவில்லை. 
அதிக மதிப்பெண்கள் எடுத்த பலரும் இணையதளத்தை பார்த்துவிட்டு கொந்தளித்துவிட்டனர். 
உதாரணமாக 240403249 எண் உள்ளவர் 231 மதிப்பெண்கள் பெற்று ரேங்க்பட்டியலில் 5228 இடத்திலும் கம்யூனிட்டி ரேங்கில் 646வது இடத்திலும் உள்ளார். அவருக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பு வரவில்லை. 

ஆனால் இதைவிட மதிப்பெண் குறைந்துள்ளவர்கள் பலருக்கும் நேர்முகதேர்வுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

உதாரணமாக.1. Roll Number 271022277, kh®¡ 135, nu§»š 343792 community Rank 71601
2. Roll Number 2600525037, kh®¢ 141, nu§»š 284255 Community Rank 58389
3. Roll Number 270139086, kh®¡ 154.5, nu§»š 180056 Community Rank 36044
4. Roll Number 010807168, kh®¡ 157.5, nu§»š 162245 Community Rank 73135
5. Roll Number 030162283, kh®¡ 159, nu§»š 155318 Community Rank 69998.
இது ஒரு சாம்பிள் மட்டுமே. 

இதைவிட நிறைய எண்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். இதில் சிறப்பு கோட்டா என்று கூறவும் முடியாது. ஒரே கம்யூனிட்டியை சேர்ந்தவர்களில் மதிப்பெண் அதிகமாக பெற்ற பலரும்அழைக்கப்படவில்லை. 

குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.ஏதோ குளறுபடியோ, மோசடியோ நிகழ்ந்துள்ளது என்று நினைத்து பாதிக்கப்பட்ட தேர்வர்கள் சிலர் சமீபத்தில் தூத்துக்குடியிலிருந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைமையகத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே போனபோதுதான் இதேபோன்று பாதிக்கப்பட்ட பலரும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. 

அங்குள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகிய போது, அங்குள்ள அதிகாரிகள் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்துள்ளனர்.

தேர்வர்களின் கேள்விகளைச் சமாளிக்க முடியாமல் நான்காம் தளத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடமிருந்தும் அழைப்பு வந்தது. எல்லோரையும் சேர்ந்து சந்திக்க முடியாது. யாராவது ஒருவரை வரச் சொல்லுங்கள் என்றார் அவர். அந்த ஒருவரையும் தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள் என்று சொல்லி மிரட்டியிருப்பதாகத் தெரிகிறது. 

மேலே சென்ற அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது.மற்றவர்களுக்கு உரிய பதில் இல்லை. இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் இங்கு முறைகேடு நடப்பது உறுதி என்று, இந்த தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர். 

இதற்கிடையே 2013-14 , 2014-15-20.4.2016 மேலும் கம்யூனிட்டி ரேங்க்பார்த்து தெரிந்து கொள்ளும் நிலையிலிருந்தது. 

தற்போது உண்மையை மறைக்க சர்ச்சைக்குரிய மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலை இணையதளத்திலிருந்து எடுத்துவிட்டார்கள்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தகுதி வாய்ந்தவர்களை எவ்வித விருப்புவெறுப்புமின்றி நேர்மையாக தேர்வு செய்கிற அமைப்பு. 

அதிமுக அரசின் காலங்களில் இத்தகைய நம்பிக்கையை இழந்து அதன் பெருமை சீரழிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவின் துணைஅமைப்பாக தேர்வாணையம் மாற்றப்படுகிறது.
உதாரணத்திற்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், 14 உறுப்பினர்களும் இருக்க வேண்டும். 

இதில் 11 உறுப்பினர் பணியிடங்கள் காலியாக இருந்ததையடுத்து அவற்றை நிரப்புவதற்காக 11 பேரை கடந்த அதிமுக அரசு நியமித்தது. அதிலே ஐஏஎஸ் அதிகாரிராஜாராம் உள்ளிட்ட நால்வர் தவிர மீதமுள்ள 7 பேர் ஆளுங்கட்சி வழக்கறிஞர்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற சட்டப்பூர்வ ஆணையத்தின் உறுப்பினராவதற்கான தார்மீக தகுதி அவர்களுக்கு இல்லை. ஆனால் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்தை செய்துள்ளது. 
இந்த 14 பேரில் ஒருவர் கூட பெண்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் கண்டனத்திற்குரியதே.அதிமுக ஆட்சியில் இதற்கு முன் இப்பதவியில் நியமிக்கப்பட்டவர்களும் அதிமுகவின் செயல்பாட்டாளர்களே என்பதையும் பார்க்க முடியும்.காவல்துறை தலைமை இயக்குநராக இருந்தபோது காட்டிய விசுவாசத்திற்காக ஆர்.நட்ராஜ் இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலம் முடிந்தவுடன் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அவருக்கு பிறகு ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகளை நடத்திய அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான நவநீதகிருஷ்ணன் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இப்படியாக பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு அதிமுகவின் துணை அமைப்பாக மாற்றப்பட்டிருக்கிறது.

தகுதியும், நேர்மையும் இல்லாமல் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவதால்தான் ஊழல் ஆணையமாக மாறி வருகிறது.

 தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி வழங்கப்பட்டது. பெரும் ஊழல் நடைபெற்றது. 

42 அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தினர். 
அதன் தொடர்ச்சியாக குரூப் 4 நேர்முக தேர்வில் தகுதியானவர்களை புறக்கணித்து தகுதியற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க முயற்சிகள் நடைபெறுகிறதா? 

இதுகுறித்து வெளிப்படைத்தன்மையோடு தேர்வாணையம்தகவல்களை வெளியிட முன்வருமா? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...