செவ்வாய், 6 செப்டம்பர், 2016

காதல் கடந்து போகும்


"காலங்கள் கடந்து போகும் 

காதலும்தான்.

கூறிய வார்த்தைகள் மறந்து போகும், 


எண்ணிய எண்ணங்கள் அழிந்து போகும் 


ஆனால் உன் மீதான அன்பு மட்டும் 


மறைக்க இயலாதது. 


காதல் கனவுகள் கடக்க முடியாதது. 


தீன்டிய இன்பம் இன்றும் இனியதானது. 


காரணங்கள் மட்டும் இன்னும் விடை இல்லாதது?


000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
காதல் தோல்விகள் 
அன்று தேவதாஸ்களை வளர்த்தது.

தாடையில் மயிர் வளர்த்தது.
குடிக்க வைத்தது,
கவிதைகளை எழுத வைத்தது.
இன்று 
காதல் தோல்விகள் 
காதலியின் மேனியில் கவிதைகளை 
கத்தியால் எழுதவைத்தது.
கொலையையும் அதானால்
 தற்கொலைகளையும் வளர்க்கிறது.

வாழ்வே மாயங்கள் மறைந்து போனது.
மகாதேவி வீரப்பா சிரிப்புகளால் நிறைகிறது.
000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆபத்தில் இந்தியப் பொருளாதாரம்!

ஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...