bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

யோக்கியன் வர்றான்…..

இந்த கட்டுரை விகடன் இணையதளத்தில் வந்திருந்தது.   என்ன காரணமென்றே தெரியாமல், திடீரென்று அந்த கட்டுரை விகடன் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.    ஜக்கி என்ற திருட்டுப் பயலின் நீண்ட ஆக்டோபஸ் கரங்கள் விகடன் வரை நீளக் கூடியதுதான்.  ஜக்கியை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே விகடன்தான் .  
லிட்டருக்கு 5 கி.மீ மைலேஜ் தரும் காரில், நதிகளை மீட்க பயணிக்கும் ஜக்கி வாசுதேவ்!
‛ரமணா’ படத்தில் ஒரு காட்சி. ஆபாச சுவரொட்டிகளை அழிக்கும் இளம்பெண்களைக் கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இது தெரியாமல் முழிக்கும் அந்தப் பெண்களுக்கு விஜயகாந்த் விளக்கம் சொல்வார், ‛‛அந்த போஸ்டர்ல இருக்குற ஆபாசத்தை விட, நீங்க போட்டிருக்கிற டிரஸ்தான் ஆபாசமா இருக்கு!’’. அப்படித்தான் இருக்கிறது,
 ‛நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்’ என்ற பெயரில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் விழிப்புஉணர்வு பயணம். ஆம், நதிகளை மீட்கக் கோரி, கோவை – டெல்லி வரை சாலை மார்க்கமாக, 7,000 கி.மீ தூரம் பயணித்து விழிப்புஉணர்வு பிரசாரம் செய்கிறார் ஜக்கி வாசுதேவ். அவர் பிரசாரம் செய்வதில் பிரச்னை இல்லை. 
அவர் செல்லும் கார்தான் மேட்டர்.
W463 என்ற அடையாள எண்ணைக் கொண்ட G-க்ளாஸ் எஸ்யூவியின் AMG வெர்ஷன்தான் G63. 1980-களில் அறிமுகமான இந்த ஆஃப்ரோடிங் பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி, 37 வருடங்களாகத் தயாரிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. எனவே ஜக்கி வாசுதேவ் பயன்படுத்தும் இந்த எஸ்யூவியின் அடிப்படை டிசைனில் அதிக மாற்றங்கள் இல்லாவிட்டாலும், தொழில்நுட்ப ரீதியில் அதிரடியான முன்னேற்றம் தெரிகிறது. 
ஆனால் வழக்கமான  G-க்ளாஸ் மாடலில் இருந்து AMG மாடலை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக, மெர்சிடீஸ் லோகோவுடன் கூடிய அகலமான க்ரில், Bi-Xenon ஹெட்லைட், பெரிய ஏர் இன்டேக் உடன் கூடிய முன்பக்க பம்பர், சிவப்பு நிற டிஸ்க் பிரேக் காலிப்பர், 20 இன்ச் 5 ஸ்போக் அலாய் வீல்கள், காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் Quad எக்ஸாஸ்ட் பைப்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஸ்டீல்லால் ஆன ஸ்பேர் வீல் கவர் மற்றும் ரன்னிங் போர்டு எனச்சில தனித்தன்மையான டிசைன் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
Nappa லெதரால் சூழப்பட்டிருக்கும் கேபினிலும், AMG ஸ்பெஷல் கார்பன் ஃபைபர் வேலைப்பாடுகள் – AMG ஸ்போர்ட் ஸ்ட்ரிப் – ஸ்டீல்லால் ஆன  AMG Door Sill – AMG ஸ்பெஷல் ஸ்டீயரிங் வீல் – THERMATIC கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி மற்றும் சீட்கள் – Harman Kardon ஆடியோ சிஸ்டம் – COMAND இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இன்டீரியரிலும் இது தொடர்கிறது. 
இப்படி சிறப்பான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருக்கும் G63 எஸ்யூவியில் இருப்பது, 572bhp பவர் – 76kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 5.5 லிட்டர் V8 Bi-Turbo பெட்ரோல் இன்ஜின். 
இவ்வளவு பவர் இருப்பதால், 2.5 டன் எடை கொண்ட G63 எஸ்யூவி, 0 – 100 கிமீ வேகத்தை வெறும் 5.4 விநாடிகளிலேயே எட்டிப்பிடித்து, அதிகபட்சமாக 210கிமீ வேகம் வரை (Electronically Limited) செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கிறது. 
இந்த இன்ஜின், இதற்கென ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட AMG Speedshift-Plus 7G-Tronic ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஆக இன்ஜினின் அதிரடியான செயல்திறனை, நான்கு வீல்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வேலையை, இது கச்சிதமாகச் செய்கிறது. எக்ஸாஸ்ட் சத்தமும், காரின் பெர்ஃபாமென்ஸைப் போல படுமிரட்டலாக இருக்கிறது. Body On Frame, அதாவது லேடர் ஃப்ரேம் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் G63 எஸ்யூவி, 4 வீல் டிரைவ் – 3 Differential Lock (Front,Center,Rear) – ஆஃப் ரோடு Reduction கியர் – 220மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்ற ஆஃப்ரோடு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. 

இவ்வளவு பவர்ஃபுல்லான எஸ்யூவியில் மைலேஜ் முக்கியம் இல்லை என்றாலும், அதனை அதிகரிக்கும் பொருட்டு, ஸ்டார்ட் – ஸ்டாப் சிஸ்டம், Brake Energy Recuperation போன்ற வசதிகள் இடம்பெற்றிருப்பது ப்ளஸ். சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, ரேடாரை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் – Blind Spot Assist – ரிவர்ஸ் கேமரா உடனான Partktronic சிஸ்டம், Hill Hold அசிஸ்ட், Tyre Pressure Monitoring சிஸ்டம், NECK-PRO ஹெட்ரெஸ்ட் – பல காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (4ETS), எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் (ESP) எனப் பட்டியல் நீள்கிறது.
ஆனால் இந்த G63 AMG எஸ்யூவியை ஒருவர் வாங்க விரும்பினால், அதற்கு 2.17 கோடி ரூபாய் (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை) செலவழிக்க வேண்டும் என்பதுதான் மயக்கத்தை வரவழைக்கிறது. 
சாலை வரி, இன்சூரன்ஸ், பதிவுத்தொகை தனி. 
இந்த எஸ்யூவி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 கி.மீ மைலேஜ் மட்டுமே தரவல்லது. 
மேலும், ஒரு கிமீ தூரம் செல்லும்போது, 322 கிராம் கரிம வாயுவை (CO2) இது உமிழ்கிறது. 
அப்படியெனில், அவரது பயணத்தின்போது இந்தக் கார் வெளியிடும் புகை சுற்றுச்சூழலை எந்தளவு மாசுபடுத்தும் என்பதையும் இது எவ்வளவு லிட்டர் பெட்ரோலை எரியூட்டும் என்பதையும் உங்கள் கணக்குக்கே விட்டுவிடுகிறோம். 
அவரது பயணத்துக்கு உதவியாக வரும் கார்கள் வெளியிடும் மாசு மற்றும் அவை எரியூட்டும் டீசல் (லிட்டர்கள்) கணக்கு தனி. ஆக, இப்படித்தான், ஜக்கி வாசுதேவ், ”நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன், 7,000 கிமீ தூரம் பயணம் விழிப்புஉணர்வு மேற்கொண்டுள்ளார்.
வாழ்க ஜனநாயகம்!

நன்றி விகடன் இணையதளம்.                                                                                உதவி:சவுக்கு,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...