வெற்றி தந்தது!
மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக பதினைந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பாஜகவை, கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்றது காங்கிரஸ்.
அமோக வெற்றி இல்லையென்றாலும், காங்கிரசின் வெற்றி மக்களவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், முடிவோ முற்றிலும் வேறொன்றாக இருந்தது.
மொத்தமுள்ள 29 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
மீதமுள்ள 28 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே காவியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தபோதும் பாஜகவின் இந்த வெற்றி எப்படி, யாரால் சாத்தியமானது?
இந்தி பேசும் மாநிலங்களில் சமூகத்தின் அடிவரை ஊடுருவி இருக்கும் ஆர்.எஸ்.எஸ் -தான் பாஜகவின் வெற்றிக்கு முழுக் காரணி.
இத்தனைக்கும் பல பாஜக வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்தரப்பு பாஜகவினர் போராட்டங்களையெல்லாம் நடத்தினர்.
பதவியில் இருக்கும் எம்.பி.க்களுக்கு வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பளித்ததால் பலர் அதிருப்தியில் தேர்தல் பணியாற்றவில்லை.
போபால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளி பிரக்யா தாக்கூரை-ஐக் கூட பல பாஜகவினர் விரும்பவில்லை.
பல பாஜக தலைவர்கள் அவருக்காக தேர்தல் பிரச்சாரத்துக்கு கூட செல்லவில்லை. இப்படி உட்கட்சி பூசல்கள் ஒருபுறம் இருந்தபோதும்கூட இந்த வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர்.
இவர்கள் வெற்றிக்கு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்-கத்தின் நான்கு துணை அமைப்புகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
வன்வாசி கல்யாண் ஆசிரமம், வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தான், பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் விசுவ இந்து பரிசத் ஆகிய நான்கு அமைப்புகள் ஒவ்வொரு நாளும் பெண்களையும் இளம் வாக்காளர்களையும் சந்தித்து மூளைச் சலவை செய்திருக்கிறார்கள்.
வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்பே ‘தேர்தல் பணி’யில் இறங்கிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த மால்வா தெரிவிக்கிறார். “நாங்கள் ஆறு மாதத்துக்கு முன்பே பணியைத் தொடங்கிவிட்டோம். எந்த அரசியல் கட்சி பற்றியோ, சாதி பற்றியோ பேசவில்லை. பதிலாக, ‘தேசியவாத’த்தையும் ‘தேச பாதுகாப்பை’யும் பேசினோம்.
அனைத்து துறைகளிலும் சமூக வளர்ச்சி குறித்துப் பேசினோம்.
இந்த நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் யார் நிற்கிறார்களோ அவர்களுக்காக வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டோம்” என்கிறார் அவர்.
“மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பின்னால் இருந்து பணியாற்றினார்கள். பல மாநிலக் கட்சிகளுடன் பேசி, அவர்களை ஒருங்கிணைக்க பல கூட்டங்களை அவர்கள் நடத்தினார்கள்” என ஒரு காங்கிரஸ் தலைவர் தெரிவிக்கிறார்.
சில பாஜக வேட்பாளர்கள் முற்றிலும் புதியவர்கள், அவர்கள் வென்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதல் காரணமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலைப்பின்னல்தான் என்கிறார் அவர்.
“மோடி அலைக்கு அடுத்து, ஆர்.எஸ்.எஸ். வித்தியாசத்தை உண்டாக்கியது” என்கிறார் மற்றொரு காங்கிரஸ் தலைவர். “ஆர்.எஸ்.எஸ்.தான் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் கையில் வைத்திருந்தது” என்கிறார் காங்கிரஸ் பிரச்சாரக்குழு தலைவர்.
ம.பி.-யின் முன்னாள் முதல்வரும் காங்கிரசின் முக்கிய தலைவருமான திக்விஜய்சிங், பிரக்யா சிங் தாக்கூரிடம் பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
அந்தத் தொகுதியில் பிரக்யாவின் வெற்றிக்காக சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வீடு வீடாக சென்றனர்.
மால்வா நிமாரில் ஆறு மாதங்களுக்கு முன்புதான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தனது ஆழமான கால் தடத்தைப் பதித்திருந்தது. ஆனால், அதை உடைக்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். காவி தொண்டர் படை ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பிப்ரவரி 19 – 22 வரை இந்தூரில் முகாமிட்டு, மூத்த தொண்டர்களைச் சந்தித்து தேர்தல் பணியாற்ற ஊக்கம் கொடுத்திருக்கிறார்.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், “எங்களுடைய ஆட்கள் அதிகாலையிலேயே களத்துக்குச் சென்றுவிட்டார்கள்.
ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். இந்தூருக்கு அதிக கவனம் செலுத்தினோம்.
நாங்கள் திட்டமிட்டோம், வீடு வீடாக பிரச்சாரத்தில் இறங்கினோம்” என்கிறார்.
தேச பாதுகாப்பு, நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றி வாக்காளர்களின் கருத்தைக் கேட்க படிவங்களைக்கூட ஆர்.எஸ்.எஸ். விநியோகித்திருக்கிறது.
“வேட்பாளர்கள் தூங்கினாலும்கூட, நாங்கள் வாக்களர்களிடம் பேசினோம்; அதிகாலையிலும் சரி, நள்ளிரவிலும் சரி…” என்கிறார் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.
ம.பி., குஜராத், ராஜஸ்தான், உ.பி. போன்ற மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி கண்டதற்கும் அந்த மாநிலங்களில் சமூகத்தின் ஆழம் வரை பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ். என்னும் நஞ்சே காரணம்.
இவர்களைப்போல் பணமதிப்பிழப்பு,விவசாயிகள் தற்கொலை,ஜிஸ்.டி ரபேல் ஊழல்,பாதுகாப்பை படைவீரர்கள் மீது தாக்குதலை தவிர்க்காதது போன்ற பல மோடிக்கு எதிரானவை இருந்தாலும் அதை மக்களிடம் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கொண்டு செல்லாதது மிகப்பெரிய தோல்வியை தந்துள்ளது.
ராகுல் காந்தியைத் தவிர பெரிய தலைவர்கள் ஒருவரும் சரியான முறையில் பரப்புரை மேற்கொள்ளாததும்,தமிழ் நாட்டைப்போல் வலுவான இந்துத்துவா எதிர்ப்பு கட்டணியை அமைக்காததும் ,மம்தா பானர்ஜி,மாயாவதி ,முலாயம் சிங் போன்றோர் தாங்கள் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் அலைந்ததுமே அவர்களுக்கு தோல்வியை தந்தது.உள்ளது போச்சு நொள்ளைக்கண்ணா என்றாகி விட்டது.
ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பனி மட்டுமே வெற்றியை மோடிக்கு தூக்கித்தரவில்லை.
பாரதிய தேர்தல் ஆணையத்தின் மோசடித்தனமான வாக்குப்பத்திவ் எந்திரங்கள் மாற்றல் பணித்தான் முக்கிய காரணம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக