bloggiri.com - Indian Blogs Aggregator

ஞாயிறு, 30 ஜூன், 2019

நம்ம ஊரு பரவாயில்லை .

வெப்பமண்டல நாட்டில் வசிக்கும் நாம் 100 டிகிரி 105 டிகிரி வெப்பத்தை தாங்க முடியாமல் தவிக்கிறோம்.

பொதுவாகவே ஆசிய நாடுகளில் வெயில் அதிகம். ஆனால் ஐரோப்பிய நாடுகளில் குளிர்ந்த தட்பவெப்பமே நிலவும்.
தற்போது  சுற்றுச்சூழல் மாசு, உலகம் வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பாவிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக பல்கேரியா, போர்த்துகல், இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், வடக்கு மாசிடோனியா உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை 110 டிகிரியை தாண்டியது.
நேற்று 7 வது நாடாக பிரான்ஸ் உச்சபட்ட வெப்பநிலை 115 டிகிரியை சந்தித்தது.

பிரான்சின் கல்லார்கூஸ் நகரில் 115 டிகிரியை நேற்று எட்டியது.
 கடந்த 2003ம் ஆண்டு இங்கு 111 டிகிரி பதிவானதே இதுவரை உச்சபட்சமாக இருந்தது.
ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஐரோப்பியாவின் மத்திய பகுதிகளில் நேற்று வெப்பநிலை 113 டிகிரியை எட்டியது. வெளியேறிய மக்கள்இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்கள், நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
நகரங்களில் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.



கடந்த 2003ம் ஆண்டு இதே போன்று வெப்பநிலை உயர்ந்ததில் 15 ஆயிரம் பேர் வரை இறந்தனர். இவர்களில் பெரும்பாலோனோர் முதியவர்கள். 

எனவே இந்த ஆண்டும் அதுபோன்று நிகழக்கூடாது என்பதற்காக அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளன. அரசு, தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது.

பாரிஸ், லியான், மார்செல்லி நகரங்களில் மாசு ஏற்படுத்தும் கார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் காட்டுத்தீ பரவி வருகிறது.
தீயை அணைக்கும் பணியில் 600 வீரர்கள், 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.பிரான்ஸ் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அக்னஸ் பஸ்யன் விடுத்துள்ள அறிக்கையில், 'கடும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளில் குவிந்து வருகின்றனர்.
ஆனால் அங்கு அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மதிப்பதில்லை.
 இதனால் கடந்த சில நாட்களாக நீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களே காரணம்ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், உலக வெப்ப மயமாதலே இத்தகைய பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது.
இதை தவிர்க்க பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக காலாவதியான, நீண்ட காலம் இயக்கப்பட்ட வாகனங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும். மனிதர்களின் வரைமுறையற்ற சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் போக்கே இதற்கு முக்கிய காரணம், என குறிப்பிட்டுள்ளது.

 ஐரோப்பிய சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில், கணிக்க முடியாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
 இதனால் பல நோய்கள் ஏற்படலாம்.

குறிப்பாக குழந்தைகள், முதியோர் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்.
வீட்டில் இருக்கும் குழந்தைகள், முதியோரை வெளியே அனுப்ப வேண்டாம்.
அவர்களுக்கு தேவையான குளிர்ந்த சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். மருத்துவ சிகிச்சைக்கு அரசுத்துறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வெப்ப நோய்களுக்கு தேவையான மருந்துகள் கைவசம் இருக்க வேண்டும், என குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் அவ்வப்போது அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
நம்ம ஊரு பரவாயில்லை என்றுதான் இயற்கையை கொண்டாட வேண்டியுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...