bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 19 டிசம்பர், 2017

காவு வாங்க காப்புரிமை சட்டம்

ம ருந்து துறையில் பல உலக நாடுகளைஒப்பிடுகையில் இந்தியா நல்லமுன்னேற்றம் (குறிப்பாக உற்பத்தியில்)அடைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
 இப்படி நாம்துவக்கத்திலேயே சொல்வதினால்இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டதாகவோ, நம் நாட்டு மக்கள்அனைவருக்கும் மருந்துகள் தங்குதடையின்றி கிடைக்கின்றது என்றோ தீர்மானித்து விட முடியாது.இந்தியாவில் ஒப்பீட்டுளவில் குறைந்த விலையில் மருந்துகள்கிடைப்பதற்கான அடிப்படை காரணம் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டகாப்புரிமை சட்டம் தான்.
1970 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் அமலான பிறகுதான் இந்தியாவில்வர்த்தக போட்டி ஏற்பட்டு, அதுவரையில் கொள்ளை லாபமீட்டிய பன்னாட்டுநிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து சாமானிய மக்கள் கூட மருந்துவாங்கும் நிலை உருவானது.
ஏராளமான இந்திய நிறுவனங்கள் (தனியார்) மருந்து உற்பத்தி மற்றும்வர்த்தகத்தில் ஈடுபட துவங்கின. இதனூடே, ஏற்றுமதியும் அதனால் உலகசந்தையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியைகொடுத்தன. இதனால் பல நாடுகளில் இந்திய மருந்துகள் (வணிகபெயரில்லாத ஜெனரிக்) அமோக வரவேற்பை பெற்றது. இது பன்னாட்டுகம்பெனிகளுக்கு ஒரு பெரிய தடையாகவும் ,கண் உறுத்தலாகவும்இருந்தது.
வந்தது உலகமய சூறாவளி:
உலகமயம் எனும் பொருளாதார சூறாவளியும் அதன் தாக்கமும் 1990 களில்துவங்கியது என்பதும் அதனால் நாடு சந்திக்கும் பல்துறைபிரச்சினைகளின் தன்மையை பற்றி நாம் அறிவோம். மற்றைய துறைகளில்இருப்பது போல் அல்லாமல் மருந்து துறையில் ,மேலும் காப்புரிமை சார்ந்தபல அறிவியல், விஞ்ஞான விஷயங்களில் கூட அது நமது சுயசார்பைபாதிக்கின்றது. இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பலபொருட்களின் காப்புரிமையை பன்னாட்டு நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன. அதன் காரணமாக மறைமுகமாக ராயல்டி எனும் நவீனகப்பம் செலுத்த வேண்டியுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக இந்தியாவின் முன்னணி செல்போன் தயாரிப்பாளாரானமைக்ரோமெக்ஸ் ( MICROMAX) புது வகை செல்போன்களைஅறிமுகப்படுத்தியபோது, பன்னாட்டு நிறுவனமான எரிக்சன் ( ERICSSON)தன் தயாரிப்புகளை போல் உள்ளது என்றும் அதற்கான ராயல்டியை தரவேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும்தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி கொள்ள வேண்டும் அல்லது தன்னோடுஇணைந்து தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் அவசியம்என சொன்னது. அதற்கு ஏற்றாற் போல் தீர்ப்பு வரும் முன்னரே இரு தரப்புகூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமய சூறாவளியின் ஓர்உதாரணம் இது. இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டேபோகலாம் .
மோடி அரசின் களவாணித்தனம்:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன்ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பட்டமான தீவிர தாராளவாத, பொருளாதாரகொள்கைளை அமல்படுத்துவோம் என்று உறுதி பூண்டுள்ளது. அதற்காகபல சாகசங்களை அந்த அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது. உலகின்அனைத்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் மோடி அங்குள்ளகார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவில் வந்து தொழில் துவங்க அழைப்புவிடுக்கின்றார். தன் அரசின் கனவு திட்டங்களை அனைத்துமுதலாளிகளையும் அழைத்து விவரிக்கின்றார். அவருடன் செல்லும்இந்திய பெரு நிறுவனங்கள் பல இரு தரப்பு ஒப்பந்தங்களைகையெழுத்திடுகின்றன. இவரும் பல பன்னாட்டு நிறுவனங்களின்தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து இங்கு வந்து தொழில் துவங்கதேவையான உதவிகள் என்ன, எந்த சட்டங்களை திருத்தியமைக்கவேண்டும் , எந்த கட்டுப்பாடுகளை தளர்த்திட வேண்டும் என்றெல்லாம்பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய வர்த்தக சுரண்டலுக்கு வழி வகுக்கிறார்.
இப்படியெல்லாம் செய்து கொண்டே, தன் அரசின் மிக முக்கிய வலதுசாரிபொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கான வேலைகளையும்வேகமாக சேர்ந்தே செய்கின்றார்.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகடைப்பிடித்த அதே அமெரிக்க சார்பு நிலை கொள்கைகளை சிறிதளவுகூட மாற்றாமல் அப்படியே, நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆண்டுகுடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தஅமெரிக்க அதிபர் ஓபாமா வருகைக்கு முன்னதாக அமெரிக்க வர்த்தககுழு ஒன்று நம் நாட்டிற்கு வந்தது. அக்குழுவில் மிக முக்கியமாகஅந்நாட்டின் முன்னணி மற்றும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மருந்துநிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் வருகையின்அடிப்படையே, இந்திய காப்புரிமை சட்டத்தில் ஒரு தலை கீழ் மாற்றம்ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.
அமெரிக்க பெருமுதலாளிகள் சொன்ன யோசனையை மோடி அரசுமறுக்குமா? இதற்கென ஒரு திட்டம் உருவாகியது. அதன்படி இந்தியாவில்அறிவு சார் சொத்துரிமை சட்டத்தில் சில விதிகளில் மாற்றம்செய்தால்தான் நம் வர்த்தகம் பெருகும் எனும் பொய்யை சொல்லி, என்னமாற்றங்கள் வேண்டும் என்பதை பரிந்துரைக்க ஒரு சிந்தனை குழுவை(THINK TANK) நியமித்துள்ளது. இங்கிருந்து அவர்களின் அரசியல்சாகசங்கள் துவங்குகின்றது.
என்ன தைரியம்?
காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே, காப்புரிமை சட்டத்தில் அடிப்படைமாற்றங்கள் கொண்டு வந்தபோது திருத்தங்கள் கொண்டு வந்து, இன்னும்நம் நாட்டின் சுய சார்பை பாதுகாத்தது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான்என்பதை மறந்து விட இயலாது. இந்த திருத்தங்களை முன்மொழிவதற்கும்,அமல்படுத்துவதற்கும் பெரும் போராட்டங்களை நடத்திடவேண்டியிருந்தது.
அதற்கு பிறகு பல்வேறு கட்டங்களில் பல திருத்தங்கள் கொண்டு வரகொல்லைப்புற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கடும் எதிர்ப்புவந்ததால் அவையனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஆனாலும் தங்களின்கார்ப்பரேட் விசுவாசத்தை பல வடிவங்களில் காட்டினர். இறுதியாக தங்கள்ஆட்சியின் இறுதி கட்டத்தில் அறிவுசார் சொத்துரிமை குறித்து ஒருவிரிவான அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை நியமித்தது. அதில் இடம்பெற்றவர்களின் முக்கியமானவர்கள் ஓரளவுக்கு அந்த துறை சார்ந்தஅறிவு பெற்றவர்கள்.
மோடி ஆட்சி ஒரு தலைகீழ் மாற்றத்தை அதில் உருவாக்கியது. பழையகுழுவை கலைத்து புதிய குழுவை உருவாக்கியது. அதில்இணைக்கப்பட்டவர்கள் கார்ப்பரேட் விசுவாசிகள். நாட்டின் சுய சார்புக்குஎதிரானவர்கள். குழுவின் இடம் பெற்றுள்ள ஒருவர் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லியின் உறவினர். அவருக்கும் அறிவு சார் சொத்துரிமைக்கும்துளி கூட சம்பந்தம் இல்லை. பிரதிபா சிங் எனும் மற்றொரு உறுப்பினர் பலபன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை வழக்குகளில்ஆஜராகும் பெரும் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர். இந்தியாவில்குறிப்பாக குஜராத்திலிருந்து மருந்து உற்பத்தி செய்யும் கெடிலாகம்பெனியின் உரிமையாளர் உன்னத் பண்டிட் மற்றுமொருவர். இப்படி இந்தகுழுவே உண்மையான மக்கள் தேவையை , சுயசார்பைப் பிரதிபலிக்காதஒரு கூட்டம்.
மருந்து துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் முக்கியஅதிகாரியே இதை ஒப்புகொள்கிறார் எனில், இவர்கள் எடுக்கப்போகும்முடிவுகள் யார் நலனை சார்ந்திருக்கும் என்பதில் நமக்கு இரு வேறுகருத்துகள் இருக்க முடியாது.
காப்புரிமை சிக்கல்கள்:
தற்போது நடைமுறையில் உள்ள 1970 ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றதுடியாய் துடிக்கும் மோடி அரசு ஒரு பக்கத்தில் மருந்து துறையிலும்,வேறொரு பக்கத்தில் கனரக, மென்பொருள், தொழில் நுட்ப சாதனங்கள்,வலைதளங்கள் என சகலத்திலும் கை வைக்க துடிக்கிறது என்றேதெரிகிறது. மருந்து துறையில் ஏற்படும் விவகாரங்களைமுன்னுதாரணமாக கொண்டு அடுத்தடுத்து தொடரலாம் எனும்கருத்தோட்டம் நிலவுவதாக தெரிகிறது.
ஹெபடைடிஸ் சி எனும் வகை நோய் தாக்குதல் மிக மோசமானது. அது மரணத்தை நோக்கி இட்டுச்செல்வதாகும் . அந்நோய்கான மருந்தைபன்னாட்டு நிறுவனமான கில்லேட் உருவாக்கியுள்ளது. சோவோஸ்பிர் எனும்அந்த அடிப்படை மருந்தை தற்போது நம் நாட்டில் உள்ள காப்புரிமைசட்டத்தின் 3(d) விதியின்படி மாற்று வழிமுறையில் தயாரிக்கவாய்ப்புள்ளது. அப்படி செய்யப்பட்டால் விலை குறைவாக கிடைக்கும்.அப்படி கிடைத்தால் நோய் பாதிப்படைந்த அனைவருக்கும் அது பலனாகஅமையும்.
லாபம், லாபம், மேலும் லாபம் என்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளகார்ப்பரேட்டுகள் இதை ஏற்பார்களா? காப்புரிமை பதிவு அலுவலகம்இருக்கும் டில்லியில் தங்கள் மருந்தை யாரும் எவ்வழியிலும் தயாரிக்ககூடாது என்றும், தங்களை தவிர யாரும் இதை வர்த்தகம் செய்ய கூடாதுஎனவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. விந்தை என்ன தெரியுமா?வழக்கை போட்டவர் வேறு யாருமல்ல….. புதிதாக உருவாக்கப்பட்டுள்ளசிந்தனை குழுவின் உறுப்பினரான பிரதிபா சிங் . இதை விட கொடுமைவேறு இல்லை.
ஒரு பக்கம் ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம்வர்த்தகம் சார் அறிவு சார் சொத்துரிமை திட்டங்களை அமல்படுத்தஇந்தியாவை கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றது. மறு புறத்தில் உலகமருந்து லாபியின் முக்கியஸ்தர்களான அமெரிக்க நிறுவனங்கள்சட்டங்களை தலைகீழாக மாற்ற துடிக்கின்றனர். மோடி அரசு இந்தஇரண்டு திட்டங்களுக்கும் பச்சை கொடி காட்டுகின்றது.
இந்திய நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள போதிலும்எவ்விதமான அசைவையும் அரசு செய்யாமல் இருக்கின்றது.. காரணம்என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்திய காப்புரிமை சட்டம்திருத்தப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையபல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருவது இப்போது பொது வெளியின்விவாதத்திற்கு வந்த பிறகும் கூட அரசு தன் அடிப்படை நிலையை மாற்றிகொள்வதாக இல்லை. அரசின் சார்பாக சட்ட திருத்தத்தை ஆதரித்துஅதிலும் குறிப்பாக 3(d) எனும் மிக முக்கியமான விதியை மாற்றினால்எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகஉலகமயத்தை ஆதரிக்கும் சிலரை வைத்து பேச வைக்கின்றது,ஊடகங்களின் மூலமும் பதிய வைக்கின்றது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி உலக தரத்துடன்இணைந்தவாறு நம் நாட்டு காப்புரிமை சட்டம் இருந்தால்தான் நம்மால்சாதிக்க முடியும் என்று சொல்லுகின்றார். இது போதாதா? இந்தியாவின்பல நாளேடுகளில் இப்படி பிரதமர் பேசியிருப்பது சுயசார்புக்கு நல்லதல்லஎன தலையங்கமே எழுதியுள்ளது. ஆனாலும் என்ன…..அமெரிக்காவின்மிக சக்திவாய்ந்த மருந்து கம்பெனிகளின் அதிகார மையங்கள் அவர்கள்நாட்டின் வர்த்த்க பிரதிநிதியிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி நம்நாட்டை முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில் வைக்க சொல்லிகட்டாயப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகள் பல்வேறு நாடுகளின்90% தேவையை நிரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருவதையும்அந்நாடுகளில் தங்களால் லாபம் ஈட்ட முடியவில்லை எனும் கோபம் ஒருபுறம், அப்படியே புதிய மருந்துகளை இங்கேயே விற்க முயற்சிக்கும்போது,சட்டங்கள் வலுவாக இருப்பதாலும், நீதிமன்றங்களின் அனாவசியதலையீடுகள், வர்த்தகத்தை முற்றிலும் தடுக்கும் தீர்ப்புகள் என்று பெரும்முதலீடுகளை வழக்குகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இதற்கு ஒருநிரந்தர தீர்வினை நோக்கி செல்லவே சட்ட மாற்றம்.

தரம் எனும் ஆயுதம்
இந்திய நிறுவனங்கள் உலகின் பல நாடுகளின் தங்களின் வர்த்தகத்தைதொடர்ந்து அதிகரித்து வருவதும், பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம்சரிவதும் பிரச்சினையாக உருமாற எப்படி இவர்களை முடக்குவது எனும்யோசனையில் இறங்கிய கம்பெனிகள் தங்கள் அதீத ஆற்றலைபயன்படுத்தி இந்திய நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக வாங்கதுவங்கினர். இது ஒரு கட்டம் வரை சென்றது. நிலையானவியாபாரத்தையும் இந்திய சந்தையை பற்றியும் ஆழ்ந்த அறிவைஅளித்தது. ஆனாலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை.
அடுத்த கட்டமாக மற்றொரு முறையை கையாண்டனர். உலக அளவில்மருந்துகள் தரம் பற்றி சொல்லும் போது அமெரிக்காவின்தரக்கட்டுபாடுதான் சிறந்தது எனும் விஷயத்தை கொண்டு இந்தியநிறுவனங்களின் தயாரிப்புகளில் தரம் இல்லை என்றும், முறையாகசுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை எனும் பொய்காரணத்தை சொல்லி வர்த்தகத்தை முடக்கினர். தங்கள் நாட்டுமக்களுக்கு இந்திய மருந்துகளால் ஆபத்து என்று வாதத்தை எழுப்பி சிலபொது நல அமைப்புக்களின் மூலம் அமெரிக்காவின் நீதிமன்றங்களில்வழக்கு போட வைத்தனர் . இவ்வழக்குகளுக்கு செலவிட முடியாமலும்,பெரும் தொகையை இழந்த பல நிறுவனங்கள் தங்கள் மருந்துகளைஏற்றுமதி செய்வதையே நிறுத்தினர்.
இதுவும் போதாது என்று தற்போது அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டுஅலுவலகம் இந்தியாவில் திறக்கப்பட்டு அடிமடியிலேயே கைவைத்துவிட்டனர்.
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதும்,குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மிககுறைந்த விலையில் கிடைக்க வைத்தது காப்புரிமை சட்டத்தால் ஏற்பட்டசாதனைகள். அது இன்று ஒரு கேள்வி குறியாக மாறியுள்ளது.
தரம் இல்லாமலா நாம் சாதனைகள் செய்துள்ளோம்? அதிகாரம் தங்கள்கையில் இருப்பதால் இத்தனை அட்டூழியங்கள் நடக்கின்றது. அரசின்துணையோடு நல்லாசியோடு முடக்கப்படுகின்றது.
நமது பாரம்பரியம்:
உலகமயமாக்கலுக்கு பிறகும் கூட, நாம் ஒரு சமச்சீரான நிலையைத்தான்கடைபிடித்து வந்துள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைவழங்குவது, காப்புரிமை அடிப்படைகளை பாதுகாப்பது, மக்கள் வாங்கும்சக்திக்கேற்ப முடிவுகளை எடுப்பது, நல்வாழ்வுக்கான உரிமையைநிலைநாட்டுவது என தன்னகத்தே பல நல்ல அம்சங்களை கடைபிடித்துவருகின்றது.
முதலாவதாக இந்திய காப்புரிமை அலுவலகம் கடுமையான தகுதி ஆய்வுசெய்கிறது. இரண்டாவதாக, மக்கள் நலன் மற்றும் தேவையை கணக்கில்கொண்டு கட்டாய லைசென்சிங் முறையை கொண்டு அனுமதியும்,மூன்றாவதாக, இந்திய நீதிமன்றங்கள் காப்புரிமை அமலாக்கத்தில்ஏற்படும்சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு தேவையைதீர்மானிக்கிறது, இறுதியாக இந்திய வர்த்தக பிரதிநிதிகள் (அமைச்சகஅதிகாரிகள் மற்றும் அமைச்சர்) கட்டுபாடற்ற வர்த்தக ஒப்பந்தங்களைஅறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் ஏற்று கொள்வதில்லை எனும்கொள்கையை நிலையாக பின்பற்றி வருகிறது. ஆனால் இன்றோ எல்லாம்தலை கீழ் மாற்றத்தை நோக்கி. காரணம் பிஜேபியின் கொள்கை நிலை.
மேற்கண்ட கொள்கை முடிவுகள் உருவானதற்கு மிகப்பெரிய அடிப்படையாகஇருந்தது மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றதிலும், பொதுவெளியிலும்தொடர்ச்சியாக நடத்திய இயக்கங்களும் உரிய நேரத்தில் செய்யப்பட்டதலையீடுகளும்தான் என்பதை நாடறியும். பிப்ரவரி மாதம் நடைபெற்றமார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயற்றப்பட்ட அரசியல்தீர்மானத்தில் நம் நாட்டிம் சுயசார்பை கேள்வி குறியாக்கும் காப்புரிமைசட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படகூடாது என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
முழு சுரண்டல்
மருந்து துறை மட்டுமல்லாமல் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பலபொருட்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமையை எப்படிபெற்று கொள்கிறது என பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஆனால்நாம் அதை இதுநாள் வரையில் பெரிதாக எடுத்து கொள்ளாமல்போனதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் இன்று நம் அன்னியசெலாவணி எப்படி யெல்லாம் காப்புரிமையாக செல்கிறது என்பதுபுலப்படும்.
ஒரு சிறு உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவின் முன்னணி இரு சக்கரவாகன தயாரிப்பாளர்களாக உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஜப்பானின்ஹோண்டா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்அடிப்படையில் இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் தயாரித்தது.அவர்களின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எரிபொருள் பயன்பாட்டைகுறைத்து எடை குறைவாக உள்ள மோட்டார்கள் உருவாக்கப்பட்டு இந்தியசாலைகளுக்கு ஏற்ப சந்தைக்குள் வந்தது. அதேபோல் ஜப்பானின் சுசுகிநிறுவனம் மற்றொரு பெரிய குழுமமான டிவிஎஸ்ஸுடன் கூட்டு தயாரிப்பைதுவங்கியது. இன்று அந்நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக பார்த்தால் முழுஇந்திய நிறுவனங்கள். ஆனால் இன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுசாலைக்கு வரும் ஒவ்வொரு வண்டிக்கும் காப்புரிமைக்காக ஒரு குறிப்பிட்டதொகையை கொடுத்து கொண்டுதான் இருக்கின்றன என்று நினைக்கும்போது எவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என எண்ணிபார்ப்போம்.
இது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் நாம் அறியாமல் கொடுக்கும்தொகையை யோசித்தால் நாம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றோம்என்பது புரிய வரும்.
இப்போது கூட நாம் கணிணி துறையில் மிக பெரிய முன்னேற்றங்களைஅடைந்துள்ளோம் என்றும், பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்றுசொல்லப்படுகின்றது. சென்ற மாதம் அமெரிக்கா சென்ற நமது பிரதமர்மோடி புகழ் பெற்ற சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று பல முக்கியமென்பொருள், கணிணி நிறுவனங்களின் தலைமை செயல்அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கவேண்டும், கிராமங்களில் கூட அகண்ட அலைவரிசை சேவைகிடைக்கப்பெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார் .அதை ஏற்றுக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்போட்டியில் ஈடுபடும். அப்படி அமையும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்உட்பட பல கம்பெனிகள் மறைமுக கொள்ளை சுரண்டலில் லாபமீட்டும்.
அதேபோல இப்போது நம்மில் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப்(WHATS APP) முகநூல் (FACEBOOK) உட்பட பல சமூக வலைதளங்களைஇலவசமாக பயன்படுத்துகிறோம். ஒரு நிமிடம் யோசிப்போம். இவைகளைகாப்புரிமை வட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்னவாகும்? அப்படிஆவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை என்பதைத்தான் இன்றுநடக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன.
வர்த்தக ரீதியான சுயசார்பை முடக்கி காலம் முழுதும் பொருளாதாரஅடிமைகளாக நம்மை மாற்றும் ஒரு திட்டம்தான் காப்புரிமை மாற்றமும்.அதனால் ஏற்படவுள்ள விளைவுகளும், எனும் கருத்தோட்டதை நாம் இன்றுமக்களிடத்தில் உணர்த்த வேண்டிய மிக முக்கிய தேவை உள்ளது.
இன்று மருந்து துறையில் அதிலும் குறிப்பாக சுயசார்போடு மருத்துவம்எனும் கொள்கையில் கியூபா உலகுக்கே வழிகாட்டியாக திகழ்கின்றது. பலஉயிர் கொல்லி நோய்களுக்கு தங்களின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவைபயன்படுத்தி புது வகை மருந்துகளை உருவாக்கியுள்ளனர். அதைதேவைப்படும் நாடுகளுக்கு குறைந்த விலையில் தருவோம் எனவும்அந்நாடு சொல்லியுள்ளது. ஒரு புது கண்டுபிடிப்பு மனிதகுலத்தின்வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டால் அது சமூக மேன்மைகாகவென்றேஎன்று கொள்ளுதல் அவசியம்.
இதை விட விவசாயத்தில் கூடுதல் பாதிப்புகளை காப்புரிமை சட்டத்தின்மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பதும், அதனால் நம் நாட்டு விவசாயம் எப்படிநலிவடைந்தது என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. .விதைகள்துவங்கி, பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட நாம் சுயசார்பை இழந்துஆண்டுகள் பல ஆகிவிட்டது என்பதை அறிவோம். இப்படி சகலதுறைகளில் காப்புரிமை எனும் சட்டவிதி மூலம் நம்மை அடிமையாக்கமுயற்சி நடைபெறுகின்றது என்பதை விரிவாக பிரச்சாரம் செய்திடல்அவசியம்.
இறுதியாக சென்ற வாரம் ஹைத்ராபாத்தில் இயங்கி வரும் ஜிவிகேநிறுவனம் நடத்தும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒருவிவகாரத்தில் அந்நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு முறைகேடு சம்பந்தமாகதகவல் வெளிவந்துள்ளது. அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஒரு புதுதகவலை வெளியிட்டார். பொதுவாக இந்தியாவில் தயாரிக்கப்படும்மருந்துகள் (ஜெனரிக்) அதாவது வர்த்தக பெயரில்லாத மருந்துகள்ஏற்றுமதிக்கு முன்னதாக கடுமையான தரக்கட்டுப்பாடிற்குஉள்ளாக்கப்படும். அப்படி தரசான்றிதழ் வழங்கப்பட்ட மருந்துகள் மட்டுமேஅந்தந்த நாடுகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதில்அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் எழும்பும். மறையும். ஆனால்இப்போது அந்த ஊழியர் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏற்பட்டுள்ளசிக்கலால் அமெரிக்க தரக்கட்டுப்பாடு நிறுவனம் இனிமேல்பொறுப்பதிற்கில்லை;காப்புரிமை சட்டம் மாற்றியிருந்தால் இப்படி சிக்கல்எழுமா? என்று நீட்டி முழக்கி அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கைஎடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை பயன்படுத்திஅதிவேகமாக காப்புரிமை சட்டமாற்றத்தை கொண்டு வர பல்துறைகார்ப்பரேட் முதலாளிகள் அமெரிக்காவின் துணையோடு எடுக்கும்முயற்சிகளை அனைத்து தளங்களிலும் விவாத பொருளாக்கி இந்தியசுயசார்பை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பதை கவனத்தில் கொள்வோம். .
சிவப்பு கம்பள வரவேற்பு:
மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் சுமார் 334 கூட்டு மருந்துகளை(COMBINATION DRUGS) தடை செய்யபட்டுள்ளதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது. தடையை பற்றி விளக்கும் போது, உலக அளவில் இதுபோன்ற கூட்டு மருந்துகள் இல்லை என்பதாலும், மேலும் இந்தியாவும்உலகதரத்துடன் ஒப்பீட்டு அளவில் இருப்பது அவசியமாக இருப்பதாலும்,மக்களின் உயிருக்கு இம்மாதிரியான மருந்துகள் கேடு விளைவிக்கும்என்பதாலும்தான் இந்த அறிவிப்பு என்று சொன்னாலும், இதற்கு பின்னால்பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருக்கிறது என்பதை சொல்லிதெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்தியதன்மைகளுக்கேற்ப இந்திய நிறுவனங்கள் முறைப்படி இந்திய மருந்துகட்டுப்பாடு துறை மூலமாக சந்தையில் மருந்துகளை உற்பத்தி செய்யவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் அனுமதி பெறுகின்றன. இந்த மாதிரியானகூட்டு மருந்துகள் ஏதோ இப்போதுதான் தங்களின் கவனத்துக்குவந்ததை போலவும், வெறும் 344 மருந்துகள்தான் தடைசெய்யப்படவேண்டியதை போலவும், வேறு மருந்துகள் அனைத்தும்முறையாக இருப்பதை போலவும் ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கிவருகிறது.
ஒருபக்கம் தடை, மறு பக்கம் நீதிமன்ற தடையாணை பெறுவது எனஇரட்டை நிலைக்கு அடித்தளமிடுபவர்களும் இவர்கள்தான்.உண்மையிலேயே நிலை என்னவென்றால் இந்தியாவின் கிராமப்புற மருந்துசந்தையை பன்னாட்டு நிறுவனங்களால் பெரிய அளவுக்கு ஊடுருவமுடியாமல் தவிக்கின்றனர். காரணம் இந்திய நிறுவனங்கள் தங்களின்கோட்டையாக இந்த சந்தையை வைத்துள்ளது ஒரு பெரிய தடையாகஇருப்பதால் இந்த மருந்துகளுக்கு தடை விதித்தால் நாம் நேரிடையாகஅந்த இடத்தையும் ஆக்கிரமித்து மேலும் லாபம் ஈட்டலாம் எனும்ஏற்பாடுதான் இந்த தடைக்கான ஊற்றுக்கண் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் சத்தமில்லாமல் மோடி அரசு ஜெனரிக்மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய, இனிமேல் கட்டாயலைசென்சிங் திட்டம் இருக்காது என அறிவித்து பன்னாட்டுநிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற விற்பனைக்கு வழி வகுத்துள்ளதுஎன்பதும் மேலும் பல தலைகீழ் மாற்றங்களை இந்திய மருந்து துறையில்உண்டாக்கும் என்பது உறுதி. இந்த மக்கள், தேச விரோத கொள்கைகளைமக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே நம் தேச பக்த கடமையாகும்.  


  நன்றி:மார்சிஸ்ட்                                                                                                                         என்.சிவகுரு 

திங்கள், 4 டிசம்பர், 2017

நடடா ராசா நட.

`இனிமேலாவது தினமும் வாக்கிங் போகலைனா, நீங்க நிறைய உடல்ரீதியான தொந்தரவுகளைச் சந்திக்கவேண்டி வரும்’ - இப்படி மருத்துவர் சொல்லிவிட்டாரே என்று வேறு வழியின்றி நடைப்பயிற்சியைத் தொடங்குபவர்களே இன்று அதிகம். 
உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, ஃபிட்டான உடல்வாகுக்கு என ஆரம்பத்திலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம். 
சுரன்

வேலை செய்யவேண்டிய இடத்துக்கு பல கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்லவேண்டிய நிலைமை எல்லாம் இன்று இல்லை. வீட்டு வாசலுக்கும், அலுவலக வாசலுக்கும் போக்குவரத்துப் புரியும் சொகுசு வாகனங்கள், அலுங்காமல் குலுங்காமல் நம்மைக் கொண்டு சேர்க்கும் பணியை வெகு சிறப்பாகச் செய்கின்றன. 
இப்படி உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.

மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல்... என நமது உடல் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் தாங்கிப்பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நம்பிக்கை துரோகம் செய்துகொண்டிருக்கிறோம். 
நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும். 
நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், 
நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும். 
சிறு வயது முதலே விளையாட்டுடன்கூடிய நடைப்பயிற்சி, முதுமையைத் தள்ளிப்போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். 
நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும் (Increases Lung capacity). எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும். உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. 

உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய்யலாம். 
வாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. 
அமெரிக்காவைச் சேர்ந்த முதியோர்களுக்கான பத்திரிகை ஒன்றில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று, இளம் வயதிலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம், முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாகத் தடங்கலின்றி இயங்குவதாகத் தெரிவிக்கிறது. 
இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையும் இயல்பாக இருக்குமாம். 
நடைப்பயிற்சி, மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஹார்மோன்கள் சுரக்க உதவும்’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நாடுகளில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பழக்கமும் முக்கியமான ஒன்று. 
தொடர்ந்து நடைப்பயிற்சி செய்யும்போது, மூளையில் உள்ள ’ஹிப்போகாம்பஸ்’ (Hippocampus) பகுதி சிறப்பாகச் செயல்படுவதாக சில ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. பல உணர்வுபூர்வமான செயல்பாடுகளுக்குக் காரணமான ஹிப்போகாம்பஸ் பகுதி, முக்கியமாக ஞாபகசக்தியுடன் தொடர்புடையது. 
நடப்பதால், மூளையின் அனைத்துச் செயல்பாடுகளும் மேம்படுவதாகவும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாள்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்... உற்சாகம் கரைப்புரண்டு ஓடும்! 

’ட்ரெட்மில் இருக்கிறது… வீட்டுக்குள்ளேயே அதில் நடக்கிறேன்’ என்பவர்களுக்கு ஒரு செய்தி… சூரிய ஒளி உடலில் படும்படி நடப்பவர்களுக்கு கூடுதல் பலனாக `வைட்டமின் டி’ கிடைக்கும். 
வெளிச்சம் உள்நுழையாத நான்கு சுவர்களுக்குள் நடப்பதற்கும் இயற்கையான ’வெளியில்’ நடப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன. 
இருப்பினும் வெளியில் நடக்க முடியாத சூழலில் இருப்பவர்கள், ட்ரெட்மில் இயந்திரத்திலாவது நடக்கவேண்டியது அவசியம். 

நடைப்பயிற்சி செய்யும்போது, அதற்குத் தோதான காலுறைகளையும் காலணிகளையும் பயன்படுத்துவது முக்கியம். நடைப்பயிற்சிக்கு உகந்த உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். 
நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடைப்பயிற்சி செல்வது நல்லதுதான். ஆனால் அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல. உலக அரசியல் அனைத்தையும் `வாக்கிங்’ செல்லும்போது பேசிக்கொண்டே இருந்தால், முழுப் பலன்களும் கிடைக்காது. 
பேசிக்கொண்டே நடப்பதால், நடைப்பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகளவில் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையலாம். நடக்கும்போதுகூட, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி செல்போனை தடவிக்கொண்டிருந்தால், விபத்து நடக்கலாம். மேடு, பள்ளம் இல்லாத சமதரையில் நடக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 
குறிப்பாக, முதியவர்கள் சமதரையில் நடப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைதானத்திலோ அல்லது வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களிலோதான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால், அருகிலிருக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. 
பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் வாசனையும் துணை நிற்க நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன்களைக் கொடுக்கும். 
புதிதாக நடைபயிற்சி செய்யத் தொடங்குபவர்கள், சிறிது சிறிதாக நடக்கும் தூரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். முதல் நாளே பல கி.மீ தூரம் நடக்கிறேன் என்று ஆர்வக் கோளாறில் தொடங்கினால், இரண்டாம் நாளுக்கு நடை தாண்டாது. 
நடைப்பயிற்சி செய்வதற்கு முன்னர், எளிய ஸ்ரெட்சிங் பயிற்சிகள் (Stretching Exercises) செய்துகொள்வது நல்லது. பழகிவிட்டால், அதன் பலன்களை உணர்ந்து, தவறாமல் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவீர்கள். 
புகை, மது போன்ற தீய பழக்கங்களைச் சார்ந்து இருக்கும் ‘Addiction’-ஐ தவிர்த்துவிட்டு, நடைப்பயிற்சிக்கு ‘Addict’ ஆகிவிட்டால் போதும். ஆரோக்கியம் உத்தரவாதம். 
காலையில் தூங்கி வழிந்து, விருப்பமில்லாமல் `நடக்கணுமே...’ என்று நடப்பது முழுமையான நடைப்பயிற்சி அல்ல! 
உடலை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், உற்சாகமாக தினமும் நடப்பதே உண்மையான நடைப்பயிற்சி! 
ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் உல்லாசமாக நடப்பதால் எந்தப் பயனும் இல்லை. 
இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்த உடலுடன் (வி)வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி. முன்பெல்லாம், ஒவ்வொரு செயலுடனும் ’நடை’ எனும் பயிற்சி ஒன்றிணைந்திருந்தது. ஆனால் இப்போதோ, நடைக்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டது. வாய்ப்புகளை உண்டாக்குவதுதான் முக்கியம். 
காலை பிறக்கும் இளஞ்சூரியன் மற்றும் மாலை மறையும் கதகதப்பான சூரியனின் பார்வையில் உற்சாகமாக நடந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்!


‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40 லிட்டர் தண்ணீர் வழங்கினாலே போதுமானது என்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் 13 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. அவற்றில் 300 கிராமங்களில் தமிழ்நாடு சுகாதாரசங்கம் சார்பில் ஒரு கணக்கெடுப்பு நடத்தினோம்.

அதில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம்...’’ என வருத்தத்துடன் பேச ஆரம்பிக்கிறார் முன்னாள் சுகாதாரத்துறை இயக்குனரான டாக்டர் எஸ்.இளங்கோ. ‘‘30 ஆண்டுகளுக்கு முன் பாட்டிலில் அடைத்து தண்ணீரை விற்கும் வழக்கம் நம்மிடம் கிடையாது. கேன் வாட்டர் பிசினஸும் புழக்கத்தில் இல்லை. குடிநீரை அரசே வழங்கியது.

ஆனால், தனியார் கம்பெனிகள் இதில் இறங்கிய பிறகு ஆண்டுக்கு இரண்டாயிரம் கோடி ரூபாய் வருமானம் கொழிக்கும் தொழிலாக தண்ணீர் பிசினஸ் மாறிவிட்டது. கேன் வாட்டர், பாக்கெட் வாட்டர், பாட்டில் வாட்டர் என எல்லாமே தரமற்றதாக வந்து கொண்டிருக்கின்றன. இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் களப்பணியாற்றி செயல்பட போதுமான பணியாளர்கள் அவர்களிடம் இல்லை...’’ என்றவர் இதில் அரசின் அக்கறையின்மையையும் சுட்டிக்காட்டினார்.
 
‘‘ஒரு தண்ணீர் நிறுவனத்திற்கு ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் அளிக்க வரும் நிறுவனம், பெயருக்கு ஏதோ  சோதித்துவிட்டு முத்திரையை அளித்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அதன்பிறகு அந்த தண்ணீர் தரத்துடன் வருகிறதா என்று கூட பரிசோதிப்பதில்லை. மெட்ரோ வாட்டரை தனியாரிடம் தாரைவார்த்து விட்டதால் அரசு நிறுவனங்கள் அதுபற்றிய அக்கறையே இல்லாமல் உள்ளனர்.

ஒருமுறை பயன்படுத்தப்பட்ட கேனை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. ஆனால், பழைய கேனை எடுத்துச் சென்று மீண்டும் அதில் தண்ணீரை அடைத்து விற்கிறார்கள். காலி கேனில் மறுபடியும் தண்ணீர் நிரப்புவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள் அதில் கலக்கின்றன. பயன்படுத்தப்பட்ட கேனை வெந்நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே புது லேபிள் ஒட்டி விற்பனைக்கு கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக் பாட்டிலை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன்படி பார்த்தால் 90% கேன் வாட்டர் குடிப்பதற்கு உகந்தது அல்ல!’’ அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் டாக்டர்.


சனி, 2 டிசம்பர், 2017

தோல்வியை மறைக்கும் பாஜக!

உ.பி. உள்ளாட்சித் தேர்தல் மழுப்பல்.!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி என்று மீடியாக்களில் பரபரப்பாக செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இந்தச் செய்திகள் எந்த அளவுக்கு திரிக்கப்பட்டவை என்பது மேலோட்டமாக பார்த்தாலே தெரிந்துவிடும்.


உ.பி.யில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளைத்தான் பாஜக வென்றுள்ளது. இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகளை பகுஜன் சமாஜ் கட்சி கைப்பற்றியிருக்கிறது.

அதேசமயம், இந்த 16 மாநகராட்சிகளுக்கான 1300 வார்டுகளில் பாஜக வெறும் 535 வார்டுகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள வார்டுகளில் பகுஜன் சமாஜ் கட்சி 145 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 171 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 86 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதமுள்ள இடங்களை மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றி உள்ளன. அதாவது மொத்த வார்டுகளில் மூன்றில் ஒரு பங்கு வார்டுகளில்தான் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

அயோத்தி மாநகராட்சியை வெறும் 3500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் பாஜக கைப்பற்றியுள்ளது. அங்கு சமாஜ்வாதி கட்சி இரண்டாம் இடத்தில் வந்தது. அதேசமயம் பாபர் மசூதி இருந்த இடத்தை உள்ளடக்கிய வார்டில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி வார்டுகளின் நிலைமை இப்படி என்றால், 198 நகராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 47ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. பகஜன் சமாஜ் கட்சி 18 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 29 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற இடங்களில் சுயேச்சைகளும் மற்ற கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது மொத்த நகராட்சிகளில் நான்கில் ஒரு பங்கு இடங்களைக்கூட பாஜக கைப்பற்றவில்லை.

மொத்தமுள்ள 5,261 நகராட்சி வார்டுகளில் வெறும் 624 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது 8ல் ஒரு பங்குதான் என்பதை பாஜக மறைக்கிறது. பகுஜன் சமாஜ் 178 இடங்களிலும், சமாஜ்வாதி 328 இடங்களிலும், காங்கிரஸ் 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளை துடைத்தெறிந்துவிட்டதுபோல, ஊடகங்கள் இதையெல்லாம் குறிப்பிட்டுக் காட்டாமல் மேலோட்டமாக மாபெரும் வெற்றி என்று செய்தியைப் பரப்புகின்றன.

அதுபோலவே மொத்தமுள்ள 438 நகரப்பஞ்சாயத்துகளில் பாஜக 81 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 67 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 34 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான இடங்களை சுயேச்சைகளும், கட்சிகளின் போட்டி வேட்பாளர்களும் கைப்பற்றி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஐந்தில் ஒரு பங்கு இடத்தில்தான் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

மொத்தத்தில் 14 மேயர் பதவிகளை அது பெற்றிருந்தாலும், மாநகராட்சி வார்டுகளை எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றி இருக்கிறார்கள். அதுபோலவே நகராட்சிகள், நகரப் பஞ்சாயத்துக்களையும் பெரும்பான்மையாக எதிர்க்கட்சிகளும் சுயேச்சைகளும்தான் கைப்பற்றியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எல்லாவகையிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஏனென்றால், அரசுத் திட்டங்களை கிராம அளவிலும், வார்டு அளவிலும் அமலாக்குவதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்களும்தான் அதிகமாக இருக்கிறார்கள். தவிர, மாநகராட்சிகள், நகராட்சிகள், நகரப்பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை.

இதையடுத்து, அங்கெல்லாம் பாஜகவின் தீர்மானங்களை எளிதாக நிறைவேற்றிவிட முடியாது என்பது நிதர்சனமான உண்மை.


மொத்தத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று 8 மாதங்களே ஆன நிலையில், அறுதிப்பெரும்பான்மை, அசுர பலத்துடன் சட்டமன்றத்தைக் கைப்பற்றிய பாஜகவுக்கு உள்ளாட்சி தேர்தல் பலத்த அடியைக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

பதிவான வாக்குகள், பாஜகவின் வாக்குச் சதவீதம் ஆகியவையும், எதிர்க்கட்சிகளின் அதிருப்தி வேட்பாளர்கள் எத்தனை இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் முழுமையாக தெரியவரும்போதுதான் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியின் லட்சணம் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வரும். மோடி சொன்னதுபோல வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றியா, பின்னடைவா என்பதும் புரியும்.
மேலும் இத்தேர்தலில்  வாக்குச்சாவடிகளில்  மேயர் தேர்வுக்கு எந்த சின்னத்திற்கு வாக்களித்தாலும் தேர்தல் எந்திரத்தில் அது தாமரை சின்னத்துக்கு போனதாக குற்றசாட்டு உ.பி,முழுக்க எழுந்ததும் அதை தேர்தல் ஆணையம் எந்திரக்கோளாறு சரி செய்யப்பட்டதாக கூறியதும் குறிப்பிடத்தக்கது.

                                                                                                                                                                                  - ஆதனூர் சோழன்
                                                                                                                                                                                         நன்றி:நக்கீரன்.

புதன், 29 நவம்பர், 2017

பொருளாதார சுனாமி உருவாக்குமா பிட்காயின்?

உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற பெயரில் கொள்ளை லாபம் சம்பாதிக்க முடியும் என்ற வேட்கையோடு முதலாளித்துவம் நடத்தி வரும் சதுராட்டங்களால் 2008ம் ஆண்டு ஏற்பட்டு மிகக்கடுமையான நெருக்கடியைப் போலவோ அல்லது அதைவிட இன்னும் கடுமையானதாகவோ பொருளாதார நெருக்கடி ஏற்படும் என சர்வதேச பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

வெறும் 900 டாலர் மதிப்பு கொண்ட பணத்தை அல்லது பொருளை பிட்காயின் என்று சொல்லப்படுகிற டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் உலவ விடுவதன் மூலம் 10,000 ஆயிரம் டாலர் மதிப்பு அளவிற்கு இன்றைய டிஜிட்டல் பரிவர்த்தனை யுகத்தில் லாபம் பார்க்க முடியும் என்ற சூழலை பெரும் கார்ப்பரேட்டுகள் உருவாக்கியுள்ளன. 

நவீன வரலாற்றில் இப்படி ஒரு கொள்ளை லாபம் எதிலும் பார்க்கப்பட்டதில்லை.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் ஏடு வெளியிட்டுள்ள செய்தியில், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்யாமல் – புதிதாக எந்தவொரு மதிப்பையும் உற்பத்தி செய்யாமல் டிஜிட்டல் பணம் என்ற பெயரில் பல நூறு மடங்கு லாபம் பார்க்கப்படுகிறது; 
இதற்கு முன்பு பணத்தின் மதிப்பில் இத்தனை பெரிய லாபம் பார்க்கப்பட்டது என்றால் அது 1915ம் ஆண்டுதான்; 
அப்போதும் கூட 82 சதவீதம் அளவிற்குத்தான் லாபம் பார்க்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் பெரும் பணக்கார கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமையிடமாக அமைந்துள்ள வாஷிங்டனின் வால்ஸ்ட்ரீட் பகுதியே உலக அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் இயங்கு தளமாக இருக்கிறது; வால்ஸ்ட்ரீட்டை மையமாகக் கொண்டு செயல்படும் மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் உலகம் முழுவதும் நிதிச் சந்தைகளில் லட்சக்கணக்கான கோடி டாலர்களை கொட்டுகின்றன; 
டிஜிட்டல் பணம் என்ற வடிவத்தில் கொட்டப்படும் இந்தப் பணம் எந்த உற்பத்தியும் செய்யப்படாமல் மீண்டும் அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி டாலர்களை லாபமாக அள்ளிச் செல்கிறது.
இது முற்றிலும் தங்கு தடையற்ற – உலகையே லாப வேட்டைக்காடாக மாற்றியிருக்கிற – யாராலும் நிறுத்த முடியாத மோசடியாக அரங்கேறி வருகிறது; டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் கடன் கொடுப்பதற்கோ, வட்டி வசூலிப்பதற்கோ, பண பரிவர்த்தனை செய்வதற்கோ எந்தவிதமான வரையறைகளோ, விதிமுறைகளோ, சட்டதிட்டங்களோ இல்லை; 

இதனால் நுகர்வோரின் பணத்திற்கு எந்த பாதுகாப்போ அல்லது உத்தரவாதமோ இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் தங்களது ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நோக்கி தள்ளிவிட்டுள்ளன. 
இதன்பின்னணியில் மிகப்பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபமே இருக்கிறது. இந்தத் துறையில் முதலீடு என்ற பெயரில் பெரும் நிறுவனங்கள் மத்திய வங்கிகளில் அல்லது பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெருமளவு பணத்தை கடனாக பெற்று அதை முதலீடு செய்கின்றன.
பங்குச் சந்தையிலும் அந்தப் பணத்தை வைத்து சூதாட்டம் நடக்கிறது. 
வங்கிகளின் கணக்குகளில் மிகப்பெருமளவு பணம் இருப்பது போல இந்த நிறுவனங்கள் காட்டினாலும் உண்மையில் ஒட்டுமொத்த பணத்தையும் இந்நிறுவனங்கள் அல்லது பெரு முதலாளிகள் சூறையாடி வேறு இடத்திற்கு கொண்டுசென்று மீண்டும் மீண்டும் டிஜிட்டல் பண வடிவில் நிதிக்கட்டமைப்பிற்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். 
அதன்மூலமாக ஒட்டுமொத்த உலகின் நிதி கட்டமைப்பையும் இவர்களே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஏடு விவரித்துள்ளது.
சர்வதேச டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை உலகில் பிட்காயின் என்று அழைக்கப்படும் இந்த டிஜிட்டல் பண முறையை 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த சதோஷி நகாமோட்டோ என்பவர் தலைமையிலான முதலாளிகள் குழு அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

முதலில் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது என்று முன்மொழியப்படும்.
எளிதானது என்று நம்பவைக்கப்படும்; மக்கள் இந்த வடிவத்திற்கு பழகியதற்கு பிறகு மத்திய வங்கிகள் மற்றும் அரசின் சட்டவிதிமுறைகள் அனைத்தும் தூக்கி எறியப்பட்டு டிஜிட்டல் பண வரித்தனை என்பதே முற்றிலும் அராஜகம் நிறைந்த, சர்வாதிகாரம் நிறைந்த வடிவமாக மாறும். 
விதிமுறைகள் அனைத்தும் மீறப்படும் நிலையில் இந்தப் பணம் எளிதில் கையாள முடியாத ஒன்றாக – பெரும் துயரத்தை தரக்கூடியதாக மாறும். 
அது படிப்படியாக ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்யும். 
அதன் விளைவாக இந்த உலகம் இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என்று சர்வதேச நிதி விவகார வல்லுநரான ஆன்ட்ரே தாமோன் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் எச்சரித்திருக்கிறார்.

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...