bloggiri.com - Indian Blogs Aggregator

திங்கள், 28 அக்டோபர், 2019

நடந்தது என்ன?என்னதான் நடந்தது ?

இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.

 இந்தக் குற்றச்சாட்டு குறித்து, செபி மற்றும் வேறு சிலகண்காணிப்பு அமைப்புகளும் விசாரிக்க இருக்கின்றன. புகார் சரியென்றால், நிர்வாகம் செய்திருப்பது சாதாரண தவறல்ல.
பலரையும் அவர்களுடைய பணத்துக்கு தவறான முடிவுகள் எடுக்க வைக்கும், உள்நோக்கமுள்ள செயல்பாடு; தங்கள் பதவிகளை, சம்பளத்தை, வருங்கால வாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள செய்திருக்கும் திட்டமிட்ட தவறான செயல்; நேர்மையான நிர்வாகிகள் செய்யக்கூடிய புரொபஷனல் செயல் அல்ல.

குற்றம் நிரூபிக்கபட்டால், புரமோட்டர்கள் தவறு செய்தவர்களைத் தண்டித்து, புதிய சரியான நிர்வாகிகளை நியமிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம். அதுதான் இன்போசிஸ் நிறுவனம் மீது முதலீட்டாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை வரவழைக்கும்.
இது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. பங்குச் சந்தையின் பட்டியலிடப்பட்ட இருக்கும் அத்தனை நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

என்னதான் நடந்தது ?

தனியார், பங்குதாரர், பிரைவேட் லிமிடெட் என்று நிறுவன அமைப்புகளுக்கும் பப்ளிக் லிமிடெட் அமைப்புக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு.

பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகம் அதன் பெரும்பான்மை பங்குகளை வைத்திருப்போரான புரமோட்டர்கள் வசம் இருப்பதால், அவர்களின் நிர்வாகத் திறமை, வேகம், ஆர்வம் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு நிறுவனம் சிறப்பாகவோ அல்லது சுமாராகவோ செயல்படும்; லாபமீட்டும். இது ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தின் குவாலிட்டி மேனேஜ்மென்ட்.
 புரமோட்டர்கள் அந்த நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகள் இன்போசிஸ் போல 14 சதவிகிதமோ அல்லது டி.எல்.எப் போல 74 சதவிகிதமோ... புரமோட்டர்கள், நிறுவனத்தின் போர்டு மூலம் முடிவு செய்கிற விதமே தலைமை நிர்வாகிகள் மற்றும் டாப் மேனேஜ்மென்ட் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 வியாபாரம் அதன் விரிவாக்கம் மற்றும் மற்ற முக்கிய முடிவுகளை எல்லாம் டாப் மேனேஜ்மென்ட் எடுக்கும்.
 தங்கள் பணத்தை, பங்குகளை வாங்குவதன் மூலம் நிறுவனத்திற்கு முதலீடாக கொடுத்தவர்களுக்கு, நிறுவனத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைத் தடுக்கும், மாற்றும் வாய்ப்பு மிக மிக குறைவு. கணிசமான பங்குகள் வைத்திருக்கும் LIC போன்ற இன்ஸ்டிடியூஷனல் முதலீட்டாளர்களாக இருந்தால் மட்டும் நிர்வாகத்தின் சில முடிவுகளை மாற்ற முடியும், தடுக்க முடியும்.

 மற்றபடி அதிலும் குறிப்பாக ரீடெய்ல் இன்வெஸ்டார் எனப்படும் சிறு முதலீட்டாளர்கள், நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக்கொண்டும் கொடுப்பதை வாங்கிக் கொண்டும் மட்டுமே இருப்பவர்கள்.

 நிறுவனத்தையும் வியாபாரத்தையும் போர்டு மூலம் நடத்தும் புரமோட்டர்கள் அல்லது அவர்கள் நியமித்த நிர்வாகிகள் செய்வது எல்லாம் நிறுவனத்தின் நலன் கருதி மட்டுமே என்றும், அவர்கள் கொடுக்கும் கணக்குகள் சரியான முறையில்தான் செய்யப்பட்டிருக்கின்றன என நம்பும் நிலையில்தான் ஏனைய பங்குதாரர்கள் இருக்கிறார்கள்.

 நிறுவனம் செய்யும் வியாபாரம், லாபம் போன்றவற்றைப் பொருத்து நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் எவர் வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம் என்ற நிலையில் வியாபாரம் லாபம் குறித்த தகவல்கள் அதி முக்கியமாகின்றன.
நிறுவனத்தின் வியாபாரம், லாபம் நஷ்டம் குறித்த தகவல்கள், அதன் பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும்.
அதாவது, பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், ஈடுபடவிரும்பும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் பங்குசந்தைகள் மூலம் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
 எப்படி? சரியான தகவல்களாக. ஒரே நேரத்தில். அனைவருக்கும் ஒன்றுபோல தெரிவிக்கப்பட வேண்டும்.
தவிர, தகவல்கள் அடிப்படையில் பங்குகள் வாங்குவதும் விற்பதும் நடைபெறுவதால், அந்த தகவல்கள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
அதை உறுதி செய்யத்தான் இன்டர்னல் ஆடிட்டர், எக்ஸ்டெர்னல் ஆடிட்டர், மேனேஜ்மென்ட் கமிட்டி, போர்டு என்று பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு நிறுவனம் பணம் செலவு செய்கிறது.

குறிப்பிட்ட காலகட்டத்தில் நிறுவனம் நஷ்டம் அடைந்தால், லாபம் செய்தால், பெரும் லாபம் செய்தால் என்று ஒவ்வொரு போக்கிற்கும், பங்குகள் விலையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் பங்குகளை சிலர் விற்பார்கள், வேறு சிலர் வாங்குவார்கள்.
அப்படி, பலருடைய பணம் இந்தத் தகவல்களை வைத்து பங்குச்சந்தையில் ஈடுபடுத்தப்படுகிறது.
லாபமோ நஷ்டமோ பார்க்கிறது.
 வெளியிடப்படும் தகவல்களால் பங்கு விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாப நட்டம் தவிர, அந்த விதம் நிறுவனத்தை நடத்திய நிர்வாகிகளுக்கு, இங்கிரிமெண்ட், போனஸ், பதவி உயர்வுகள், ஸ்டாக் ஆப்ஷன்ஸ் போன்றவையும் முடிவுசெய்யப்படும். நிறுவனத்தின் பங்கு விலைகள் உயர்வதால் புரமோட்டர்கள் சொத்து மதிப்பு கூடும் அல்லது குறையும். அந்த பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பல்வேறு பரஸ்பர நிதிகளின் NAV மாறும்.

இவ்வளவும் நிர்வாகிகள் கொடுக்கும் நிதிநிலை தகவல்களால் நடப்பவை. இவற்றைத்தான் இன்ஃபோசிஸ் நிர்வாகத்தினர் குறிப்பாக அதன் CEO மற்றும் CFO சரியாக செய்யவில்லை.
 உள்நோக்கத்துடன் செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகரித்துக் காட்டி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

கழிவு நெகிழியில் இருந்து எண்ணை ?


அமெரிக்காவில் இல்லினாய்ஸில் நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் போயிப்பெல்மயரும் அவருடைய சகாக்களும், கேரிபேக் தயாரிக்க பயன்படுத்தும் - சிதைக்க முடியாத - பாலிஎத்திலின் என்ற நெகிழியில்(பிளாஸ்டிக்கின் ) பிணைப்புகளை உடைக்கக்கூடிய ரசாயன தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் பிளாஸ்டிக் பாலிமர் ``சிதைக்கப்பட்டு'' திரவமாக மாற்றப்படுகிறது. ஏசிஎஸ் மத்திய அறிவியல் இதழில் இந்தக் குழு, முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கண்டுபிடிப்பை வெளியிட்டது.
பாலிமர் அணுக்களை மெட்டல் நானோதுகள்கள் மூலம் சிதைத்து - ரசாயன திரவமாக மாற்றுவதாக, முன்னேறிய இந்த கிரியா ஊக்கி தொழில்நுட்பம் அமைந்துள்ளது.
 இந்தத் திரவத்துக்கு பயன்பாடு, மதிப்பும் இருக்கிறது என்பது முக்கியமான விஷயம்'' என்று பேராசிரியர் போயிப்பெல்மெயர் கூறுகிறார். அர்கோன் தேசிய ஆய்வகம் மற்றும் ஆமெஸ் ஆய்வகங்களில் இருந்து சிலரும் இணைந்ததுதான் அவருடைய குழு. இதை என்ஜின்களில் எண்ணெயாகப் பயன்படுத்த முடியுமா என்று அந்தக் குழு இப்போது ஆய்வு செய்து வருகிறது.

``இந்தப் பொருட்களைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம் - இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்திற்கும் - ஒரு மதிப்பு உள்ளது. சுற்றுப்புறங்களில் அதை நாம் வீசி எறிந்துவிடக் கூடாது. அதை எரித்துவிடவும் கூடாது.''
இந்த ஆய்வு அணுகுமுறை நம்பிக்கை தருவதாக இருந்தாலும், தொடக்க நிலையில்தான் இருக்கிறது - கேரிபேக் மூலம் தயாரிக்கப்பட்ட திரவத்தை நமது கார்களில் ஊற்றக்கூடிய நாள் விரைவில் வராமல் போய்விடாது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எந்த வகையில் பயனுள்ள மற்றும் மதிப்புமிக்க வகையில் மாற்ற முடியும் என்ற பெரிய தொழில்நுட்பத்தில் பெருமளவு முதலீட்டை ஈர்ப்பதாக அமைந்துள்ளன.
ரசாயனத் துறை நிபுணர்கள், ஒரு முறை பயன்படுத்திவிட்டு வீசியெறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயனுள்ள வகையில் மாற்ற முடியுமா என்று கண்டறிவதில் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், உலகெங்கும் தினமும் ஒரு மில்லியன் டன் அளவுக்குப் புதிய பிளாஸ்டிக் கழிவுகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.

சாதாரணமாகப் பயன்படுத்தும் பல பிளாஸ்டிக் பாலிமர்களை இணைக்கும் வலுவான நீண்ட பிணைப்புகள்தான், குறிப்பிட முடியாத பயனுள்ள தன்மைகளுக்கு அடிப்படையாக உள்ளன.
 அவைதான் பிளாஸ்டிக்கின் வலு மற்றும் நீடித்த உழைப்புக்கு இயற்பியல் ரீதியிலான பலத்தைத் தருகின்றன. ஆனால் அவைதான் கெட்ட பெயருக்கும் காரணமாக உள்ளன.
அவை அழிவதற்கு மிக நீண்ட காலம் ஆகிறது என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
எனவே, அந்த பிளாஸ்டிக்கை மதிப்புமிக்க ஏதாவது ஒரு பொருளாக மாற்றினால் - எரிபொருள் அல்லது புதிய பொருட்களாக மாற்றினால் - அது நம்பிக்கை தரும் வணிக முயற்சியாக இருக்கும்.
 ரசாயன மறுசுழற்சி என்று அது கூறப்படும் - இயந்திர முறையில் மறுசுழற்சி செய்வதில் இருந்து இது முழுக்க மாறுபட்டது.
நமது பிளாஸ்டிக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீசும்போது, நாங்கள் அதைத்தான் பெருமளவு சார்ந்திருக்கிறோம். இப்போது பிளாஸ்டிக் கழிவுகள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டு, உருக்கி, சிறு உருண்டைகளாக மாற்றப்படுகின்றன. அதே வகையிலான பிளாஸ்டிக்கில் புதிய பொருட்களைத் தயாரிக்க அதைப் பயன்படுத்தலாம்.
பாலித்தீனை வெட்டுகின்ற பிளாட்டின சிறிய துகள்கள், ரசாயன நீர்மமாக அதனைமாற்றுகிறது.

இந்த நடைமுறையும் அந்தப் பொருளை அழிப்பதாக இருக்கிறது. எனவே குறிப்பிட்ட முறைகள் வரை பிளாஸ்டிக் பாட்டில்களை இதுபோல மறுசுழற்சி செய்ய முடியும்.

ரசாயன மறுசுழற்சி என்பது, ரசாயன ரீதியில் சற்று வித்தியாசமாக செயல்படுகிறது - சற்று புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. ``பிரிட்டனில் கழிவுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதன் அங்கமாக ரசாயன மறுசுழற்சி இருக்க வேண்டும்'' என்று மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் ஹென்றி ராய்ஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் ஷேவர் கூறுகிறார்.
ஆனால் இது இயந்திர முறை மறுசுழற்சியைவிட பின்னடைவு கொண்டது, ஏனெனில் இதில் எரிசக்தி அதிகமாக தேவைப்படுகிறது என்று அவர் விளக்குகிறார்.
``இந்த சிறப்பான ஆய்வையும் (நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளது) கூட 300 டிகிரி செல்சியஸில் 30 மணி நேரத்துக்கும் மேல் செய்ய வேண்டியுள்ளது.''
``குப்பைத் தொட்டியில் வெவ்வேறு வகையான கழிவுகள் நமக்குக் கிடைக்கிற நிலையில், கலப்பான கழிவுகள் மூலம் நமக்கு நிறைய கிடைக்க ரசாயன மறுசுழற்சி முறையில் வாய்ப்பு உள்ளது.''
``இவற்றை ஒன்றாக சேர்த்து நாம் நிலைமாற்றம் செய்யும்போது, பிரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போவதால், புதிய பொருள் மதிப்பு மிக்கதாக ஆகிறது.''


இந்த முயற்சியில் தொழிற்சாலைகளில் நிறைய முயற்சிகள் நடக்கின்றன. பிளாஸ்டிக்கை சிதைத்து எரிபொருளாக அல்லது புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்புக்கான கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு, தொழிற்சாலை மூலம் லாபகரமான நடைமுறைகளை உருவாக்க முன்னணி ரசாயன தொழிற்சாலை நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மறுசுழற்சி தொழில்நுட்பங்கள் மற்றும் பிளாஸ்டிக் எரிசக்தி போன்ற பிரிட்டனை சேர்ந்த புதிய சுற்றுச்சூழல் நிறுவனங்கள், 2023 ஆம் ஆண்டுக்குள் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 10 புதிய மின் உற்பத்தி நிறுவனங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளன.
 பிளாஸ்டிக்கை எரிபொருளாக சிதைப்பதற்கு, ஆக்சிஜன் இல்லாத சூழலில் அதை அதிக வெப்பத்துக்கு ஆட்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பாலிமரின் அணுக்களை சிதைத்து, பழைய அணுக்களாகப் பிரிப்பதன் மூலம், புதிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் அதை கச்சாப் பொருளாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட வேறு பல தொழில்நுட்பங்களை வெவ்வேறு நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.

இதுதொடர்பாக பெருமளவு முதலீடு செய்யப்படுவதால், புதிதாக உருவாக்கப்பட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் வெளியில் அறிவிக்கப்படாமல் உள்ளன.
உண்மையில், ரசாயன மறுசுழற்சி - நம்பிக்கை தருவதாகவும் முக்கியமானதாகவும் இருந்தாலும் - அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளையும் எந்த வகையில் பயனுள்ளவாறு பயன்படுத்தப் போகிறோம் என்ற புதிருக்கான சிறிய விடையாக இது இருக்கும் என்று பேராசிரியர் ஷேவர் கூறுகிறார்.
``பல பிளாஸ்டிக் பொருட்கள் சிறப்பாக இயந்திர முறையில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன'' என்கிறார் அவர். ``இதே நிலையில் இதைத் தொடர வேண்டும் ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியாதபோது, இந்த வலுவான பிணைப்புகளை மீண்டும் கச்சாப் பொருளாக மாற்றுவதற்கு இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு நாம் மாற முடியும்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...