bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 29 அக்டோபர், 2019

முல்லை பெரியாறு நாள்!


சிறிய மூளை இந்தியர்கள் 

ஐதராபாத் ஐஐடி.,யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நியூராலஜி இந்தியா என்ற இதழில், இந்திய மூளை வரைபடங்கள் கொண்ட ஆய்வு கட்டுரை வெளியிட்டனர்.

இது தான் முதன்முதலில் உருவாக்கப்பட்ட அட்லஸ் எனப்படும் இந்திய மூளை வரைபடமாகும்.

அந்த ஆய்வு கட்டுரையில், மேற்கத்திய நாட்டு மக்களின் மூளையுடன் ஒப்பிடுகையில், சராசரியாக இந்தியர்களின் மூளையின் உயரம், அகலம் மற்றும் எடை ஆகியவற்றில் சிறியதாக இருக்கிறது.

 மேலும், அல்சைமர்ஸ் போன்ற மூளை தொடர்பான நோய்களை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கு மூளை சிறியதாக இருப்பது உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 1886.அக்டோபர், 29.

முல்லை பெரியாறு  

ஒப்பந்தம் கையெழுததான நாள்!

அன்றைய மதுரை மாவட்டம் என்பது இன்றைய திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கியது.

 அது அன்றைய மதுரை மாவட்டம், வானம் பார்த்த பூமியாக, வறட்சியின் கோரக் கரங்களில் அகப்பட்டிருந்த கொடுமை காலம் . 

தண்ணீர் பஞ்சம் எங்கும் தலைவிரித்தாடியது.

இக்கொடுமைக்கு முல்லைப் பெரியாறு எனும் அணை மூலம், விடை காண பிள்ளையார் சுழியிட்டது, 

1886ம் ஆண்டின் இதே அக்., 29ம் நாள் தான்.

வைகை வளப்படுத்தாத கிழக்குச் சீமையை, மேற்கில் பாய்ந்து அரபிக்கடலில் வீணாய் கலந்த நதியை, தமிழகம் பக்கம் திருப்பி, ஐந்து மாவட்டங்களை வளப்படுத்த, திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஆங்கிலேய அரசு ஒப்பந்தமிட்டது அந்நாளில் தான்.
விடுதலைக்குப்  பின், இது தமிழகம், கேரளத்திற்கான ஒப்பந்தமானது. 
 இதுவே, முல்லைப் பெரியாறு அணை அமைய வித்திட்டது.
ஒப்பந்தப்படி, அணையின் உச்ச நீர்மட்டமான, 155 அடிக்கு நீர் தேக்கினால், எவ்வளவு பரப்பளவு நீர் தேங்குகிறதோ, அவ்வளவு நிலமும், தமிழகத்திற்கு, 999 ஆண்டிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. 

அதாவது, 8,591 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதி, நம் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
தேக்கடி பகுதியில், 104 அடியில் போடப்பட்டுள்ள சுரங்கம் மூலம், தமிழகத்திற்கு தண்ணீர் திருப்பவும் வழி செய்தது. இன்னும் பல உரிமைகளை, தமிழகத்திற்கு வழங்கியது, இந்த உன்னத ஒப்பந்தம்.

ஆனால், இன்று நிலைமை தலைகீழாகி விட்டது.
 படிப்படியாக, நம் உரிமைகளை கேரளாவிடம் பறிகொடுக்கிறோம். நீர் எடுக்கும் உரிமை தவிர, பழைய உரிமைகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
நமக்கு, 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கிய, 8,591 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியை, ஒரு புறத்தில் கேரளா ஆக்கிரமித்து வருகிறது. 
தேக்கடி படகு குழாம் அமைத்து, சுற்றுலா மூலம் சம்பாதிக்கிறது. 
அதை சுற்றியுள்ள பகுதிகளில், விடுதிகள் கட்ட அனுமதி கொடுத்து, 'கல்லா' கட்டுகிறது. 
முல்லைப் பெரியாறு அணையால், கேரளாவிற்கு சுற்றுலாவைத் தவிர, வேறு பலன் எதுவும் இல்லை. 
ஆயினும், நம் குத்தகை நிலத்தில் கை வைத்து, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அணையில், 140 அடியில் இருந்து, 155 அடி வரையிலான நீர்ப்பிடிப்பு பகுதியின் பல இடங்களில், கேரளா ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
 இதில், 600 ஏக்கர் வரை நாம் இழந்திருக்க வாய்ப்புள்ளது.நவீன தொழில்நுட்பங்கள், சேட்டிலைட் மூலம், எளிதில் நம் எல்லையை கணிக்க முடியும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதை பரிசீலனை செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, உரிமையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை முழுக்க, முழுக்க தமிழகத்தின் நலன் கருதி கட்டப்பட்ட அணை. ஆனால், 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தை மீறும் வகையில், கேரள அரசு நடந்து கொள்கிறது. இதற்கு எதிராக, தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும்.
 இழந்த உரிமைகளை மீட்க, தனித் திட்டத்தை வகுக்க வேண்டும். 
தனி அதிகாரிகள் மூலம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கேரளாவின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, 'சர்வே' நடத்த வேண்டும்.
 நீதிமன்றம் சென்றோ, சாதுர்யமான பேச்சு மூலமோ, உரிமைகளை நிலைநாட்ட முன்வர வேண்டும்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த முல்லைப் பெரியாறு அணைக்கு மின்சாரம் இல்லை என்றால் நம்புவீர்களா. மதகுகளை இயக்க, அதிகாரிகளின் அலுவலகங்கள், குடியிருப்புகள், தெரு விளக்குகளுக்கு, வல்லக்கடவில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது.
 2000வது ஆண்டு, மின்சார ஒயரில் அடிபட்டு, யானை இறந்தது. உடனே, மின் இணைப்பை கேரளா துண்டித்தது.அதே ஆண்டில், தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்வதாக, தமிழக அரசு தெரிவித்தது. இதற்கான செலவை, மூன்று தவணைகளில் செலுத்தியது. 
கேரள மின் வாரியம் முன்வந்தாலும், வனத்துறை முட்டுக்கட்டை போடுகிறது.
இதனால், 20 ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை, கும்மிருட்டில் கிடக்கிறது. 'ஜெனரேட்டர்' உதவியுடன், நிலைமையை நம் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சமாளிக்கின்றனர். இதற்கும் தீர்வு காண வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை தொடரும் நிலையில், அங்கு பாதுகாப்பு பணியை, கேரள போலீசாரே மேற்கொள்கின்றனர்.
இது, அணைப் பராமரிப்பு பணி மேற்கொள்ள செல்லும், நம் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு இடையூறாக உள்ளது. 
எனவே, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை, தமிழக அரசு கோரியது. 
'இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கலாம்' என, அரசு ஆணை உள்ளது. ஆனால், இதுவரை இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சமீபத்தில் தமிழக - கேரள முதல்வர்கள் சந்திப்பிற்கு பின், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 பல்வேறு உரிமைகளை நாம் மீட்க வேண்டியுள்ளது. 
முதல் கட்டமாக அணைப் பகுதிக்கு மீண்டும் மின் சப்ளை வழங்க, கேரளா முன்வந்துள்ளது.இதற்காக, தமிழகம், 13 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 
முறையாக பணம் செலுத்தியதும், மீண்டும் மின் இணைப்பு வழங்க, கேரளா பணிகளை துவங்கும். நம் இதர உரிமைகளையும் படிப்படியாக மீட்டெடுக்க, காலம் கனிந்துள்ளது.

பென்னி குவிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை, ராட்சத சுவர் போன்ற அமைப்புடையது. அதை பலப்படுத்த, முன்பகுதியில் கான்கிரீட் கலவை சரிவாக கொட்டப்பட்டு, முட்டு கொடுக்கப்பட்டது.

 அதே போன்று, பேபி அணையை பலப்படுத்தவும், 1998ல் இருந்து, தமிழக அரசு போராடி வருகிறது. இதற்கும் கேரள அரசு அனுமதி மறுக்கிறது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 136 அடியில் இருந்து, 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தியதோடு, 152 அடி வரை நீர் தேக்கும் வகையில், பேபி அணையை பலப்படுத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதற்காக, 7.85 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்த தமிழக அரசு, பணியை மேற்கொள்ள நிர்வாக அனுமதியும் வழங்கியது. இப்பணிக்காக, 25 மரங்கள் வரை வெட்ட வேண்டியுள்ளது. 
இதை காரணம் காட்டி, கேரள வனத்துறை அனுமதி மறுக்கிறது. 

பேபி அணையை பலப்படுத்தினால், நீர்மட்டத்தை உயர்த்தும் வாய்ப்பு, தமிழகத்திற்கு கிடைத்துவிடும். இதனால், சுற்றுலா பகுதிகள் நீரில் மூழ்கி, தொழில் பாதிக்கும் என கேரளா அச்சப்படுகிறது. 
மத்திய அரசு மூலம், இதற்கும் நம் மாநில அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். 

மேலும், பலப்படுத்தும் பணிக்கு, பொருட்களை கொண்டு செல்ல, வல்லக்கடவில் இருந்து, பேபி அணை வரை, 6 கி.மீ.,க்கு சாலை அமைக்க வேண்டும். 
இதற்கும் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்கிறது கேரளா.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------
 
இது என்ன சோதணை?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...