bloggiri.com - Indian Blogs Aggregator

வெள்ளி, 16 நவம்பர், 2018

காமிக்ஸ் கலைஞர்!


சின்ன வயதில் காமிக் புத்தகங்களைப் படிப்பதில் முத்தைய தலைமுறையினருக்கு ஆர்வம் அதிகமிருந்தது. தொலைக்காட்சி, இணைய ஊடகங்களின் வரவால் காமிக் புத்தகங்கள் வாசிப்பது இப்போது அரிதாகிவிட்ட நிலையிலும் ஹாலிவுட் சினிமா அந்தக் குறையைப் பலகாலமாகப் பெரிய திரையின் வாயிலாகப் போக்கியும்வருகிறது. 

அச்சு ஊடகம் தொடங்கி, காட்சி ஊடகங்கள் பலவற்றிலும் குழந்தைகள் முதல் குழந்தைமனம் கொண்ட பெரியவர்கள் வரை காமிக் வகைக் கதையாடல்களுக்கு இன்றும் கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. இவ்வகைக் காமிக், கார்ட்டூன் வகைக் கதையாடல்கள் வாசிப்பினூடாகவும், காணுதலின் வழியேயும் வாழ்வின் அன்றாட நெருக்கடிகளிலிருந்து சிறிதளவாகிலும் ஒரு ருசிகரமான மாறுதலை - ஆறுதலை வழங்கத்தான் செய்கின்றன என்பது மறுக்கவியலா உண்மை. 

இந்த உண்மைக்கு உண்மையாக வாழ்ந்த ஒரு பெரும் படைப்பாளிதான் கடந்த (நவம்பர் 12) திங்களன்று மறைந்த ஸ்டேன் லீ. ஸ்டேன்லி மார்ட்டின் லீபர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1922 டிசம்பர் 28 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே கடும் உழைப்பாளியான லீ, துவக்க காலத்தில் செய்யாத வேலைகளே இல்லை எனுமளவுக்குக் கிடைத்த வேலைகளையெல்லாம் விருப்பத்தோடு செய்தார். 

ஒரு வேலையில் நில்லாமல் புதிய புதிய வேலைகளைத் தேடிச் செல்லும் விநோத மனம் கொண்டிருந்த அவருள் ஒரு படைப்பாளன் மெல்லமெல்ல வளர்ந்து வந்தான். 
இப்படித்தான் ஒருநாள் தனது 17 வது வயதில் டைம்லி காமிக் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதிலும் சாப்பாடு வாங்கிவருவது போன்ற எடுபிடி வேலைதான் அவருக்குத் தரப்பட்டது. 


பிறகு பிழை திருத்தும் வேலை தரப்பட்டது. பிறகு மெல்ல எடிட் செய்யும் பணிக்கு மாறி, கதை உருவாக்கத்தில் உதவியாளராக உயர்ந்து அதிவிரைவிலேயே காமிக் கதாசிரியராக உயரம் தொட்டார். 

1960 ஆம் ஆண்டு டைம்லி நிறுவனம் மார்வெல் காமிக்ஸ் என்ற பெயர் தாங்கி ஸ்டேன் லீயின் பெரும் பங்களிப்புடன் உலகளாவிய சந்தையில் முதலிடத்தை விரைவிலேயே பிடித்தது. 
1966 ல் தி மார்வெல் சூப்பர்ஹீரோஸ் எனும் கார்ட்டூன் தொடர் பெருவெற்றி பெற்று அவரைத் திரை உலகிற்கு அடையாளம் காட்டியது. 
1980 களில் தொலைக்காட்சியில் இவரது ஹல்க் கதை பிரசித்தி பெற்றது. 

1989 ல் முதன்முதலாக கௌரவத் தோற்றத்தில் நடித்தார். மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் பிரதான கதாசிரியராக இருந்த ஸ்டேன் லீ படிப்படியாக எடிட்டர், பொறுப்பாசிரியர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர் என்று பல பொறுப்புக்களையும் திறம்படக் கையாளும் ஒரு திறம் மிக்க கலை ஆளுமையாகத் தரமுயர்ந்தார். 
தொலைக்காட்சி அனிமேஷன் போன்றவற்றில் முன்னணிக்கு வந்தவர் அவற்றில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவும் செய்தார். 
2000ல் வெளியான எக்ஸ் மென் படத்தில்தான் முதன்முதலில் அவரின் சினிமா நுழைவு நடந்தது. அதன் பிறகு மார்வெல் படங்கள் எல்லாவற்றிலும் அவர் இருந்தார். 

விதவிதமான கதாபாத்திரங்களில் கௌரவ வேடங்களில் மட்டுமே நடித்தும் தானொரு சூப்பர் ஸ்டாராகவே மாறி, பெரும் ரசிகர் கூட்டத்தையே சம்பாதித்துக்கொண்டவர் ஸ்டேன் லீ.“நூற்றாண்டுகளைக் கடந்தும் என் கதாபாத்திரங்களும், என் கதைகளும் மக்களை மகிழ்விப்பனவாகவே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!” - என்று கூறியவர் அவர். 

ஸ்பைடர் மேன் உள்ளிட்ட தான் உருவாக்கிய கற்பனைக் கார்ட்டூன் காமிக் கதாபாத்திரங்களுக்குத் தானே ஒரு சிறந்த ரசிகராக வாழ்ந்தவர், 95 வயது நிறைந்த நிலையில் தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டு கலை உலகிற்குப் பெரும் துயரினைத் தந்து சென்றிருக்கிறார். 

வால்ட் டிஸ்னி உருவாக்கிய பிரம்மாண்ட கறுப்பின சூப்பர்ஹீரோ படமான “பிளாக் பேந்தர்” மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 
ஆனால், 60 களிலேயே அமெரிக்காவில் கறுப்பின மக்கள் தங்களின் சமத்துவத்துக்காகப் போராடிக்கொண்டிருந்த சமயத்திலேயே ஜாக் கிர்பி எனும் கலைஞனுடன் இணைந்து “பிளாக் பேந்தர்” எனும் கறுப்பு சூப்பர்ஹீரோவை உருவாக்கி ஒருவகையில் அந்த மக்களின் சமத்துவப் போராட்டத்திற்கு ஆதரவாக தனது கலைப் பங்களிப்பைச் செய்தவர் அந்தப் பெருங்கலைஞன் ஸ்டேன் லீ.
99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999
இதுதான் ஃபர்ஸ்ட்மேனின் கதை.

சென்ற ஆண்டு லாலா லேண்ட் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்ற அமெரிக்காவின் டேமியன் சேசல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம்தான் “ஃபர்ஸ்ட் மேன்”. இதன் நாயகன் அதே லாலா லேண்ட் நாயகனான ரயான் கோஸ்லிங்க். இந்தப் படம் நிலவில் முதன்முதலில் கால் பதித்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பற்றியது. 
“இது ஒரு மனிதன் தனது சிறிய காலடியை வைத்ததுபோல் தோன்றலாம்... ஆனால், இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சலாகும்!” என்று தனது நிலவில் கால் பதித்த நிகழ்வு குறித்து நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பெருமிதத்தோடு கூறினார். 
அந்த அவரது நிலவுப் பயணத்திற்கு அவர் எப்படியெல்லாம் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார் என்பதைச் சுவைபடச் சொல்வதே இந்த முதல் மனிதன் என்ற பொருள்படும் ஃபர்ஸ்ட் மேன் ஆங்கிலப் படத்தின் கதையாம். 
அட, ஒரு லவ்வு, ரெண்டு ஃபைட்டு, மூணு சாங்குனு இல்லாம அவர்கள்தான் எதையெல்லாம் கதையாக்குகிறார்கள் பாருங்களேன்!
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888நன்றி:தீக்கதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...