bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 6 நவம்பர், 2019

'உலக நாயகன்'- 60

ஐந்து வயதில் சினிமாவில் அறிமுகமான கமலஹாசன், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார்.
அவரது கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 
 நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார். 

நவ., 7ல் சினிமா துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954 நவ., 7ல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். 
ஐந்து வயதில் 'களத்துார் கண்ணம்மா'வில் அறிமுகமானார்.

1974ல் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் 'ஹீரோ'வாக அறிமுகமானார். 

தமிழில் 1975ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் தனி 'ஹீரோ'வாக ஒப்பந்தமானார். 'சென்சார்' பிரச்னையால் இப்படம் வெளியாக தாமதமானது. 

இதனால், ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்., 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் 'ஹீரோ'வாக கமலின் முதல் தமிழ் படம். 

அதே ஆண்டு வெளியான பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படம் திருப்புமுனை ஏற்படுத்தியது. 
 1976, ஜூன் 25ல் தான் 'உணர்ச்சிகள்' 'ரிலீஸ்' ஆனது.

ஆரம்ப காலங்களில் காதல் இளவரசனாக அவதாரம் எடுத்தார்.
 சொல்லத்தான் நினைக்கிறேன்,
 நினைத்தாலே இனிக்கும்,
அவள் ஒரு தொடர்கதை, 
மன்மத லீலை, 
மூன்று முடிச்சு, 
16 வயதினிலே,
 இளமை ஊஞ்சலாடுகிறது, 
சட்டம் என் கையில், 
சிகப்பு ரோஜாக்கள்,
 நீயா,
 வறுமையின் நிறம் சிவப்பு, 
மீண்டும் கோகிலா, 
ராஜ பார்வை போன்ற படங்களில் முத்திரை பதித்தார்.
 அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமானவர், 
அவ்வை சண்முகியில் பெண்,
 இந்தியன் படத்தில் முதியவர் என பல்வேறு தோற்றங்களில் களில் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தார்.


மூன்றாம்பிறை,
 புன்னகை மன்னன், 
நாயகன், 
மைக்கேல் மதன காமராஜன்,
 குணா, 
மகாநதி, 
தேவர் மகன், 
அவ்வை சண்முகி, 
இந்தியன்,
 தெனாலி,
 தசாவதாரம், 
விஸ்வரூபம்,
 பாபநாசம் உட்பட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. 
அனைத்து மொழிகளிலும் சேர்த்து 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இளையராஜா இசையில் அதிக படங்களில் நடித்துள்ளார் கமல். 
இருவரும் இணைந்து பல 'ஹிட்' பாடல்களை கொடுத்துள்ளனர்.

பாலசந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார் கமல்.

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. 
இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்:
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி .
 முதல் படம் ராஜபார்வை (1981)-கடாரம் கொண்டான் (2019) வரை 27 படங்களை தயாரித்துள்ளார்.

இயக்கிய படங்கள்:
அவ்வை சண்முகியின் இந்தி பதிப்பான சாச்சி 420,
 ஹேராம், 
விருமாண்டி, 
விஸ்வரூபம், 
விஸ்வரூபம் -2

உதவி நடன இயக்குநராக
எம்.ஜி.ஆரின் 'சங்கே முழங்கு',நான் ஏன் பிறந்தேன்,
 சிவாஜியின் 'சவாலே சமாளி',
 ஜெய்சங்கரின் 'நுாற்றுக்கு நுாறு', 
எஸ்.பி.முத்துராமனின் 'காசி யாத்திரை' உட்பட பல படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தமிழக அரசின் கலைமாமணி விருது - 1980
பத்மஸ்ரீ - 1990
கவுரவ டாக்டர் பட்டம் - 2005
பத்ம பூஷன் - 2014
பிரான்சு நாட்டின் செவாலியே விருது - 2016
ஒன்பது முறை தமிழக அரசின் திரைப்பட விருது 
மூன்று முறை  ஆந்திராவின் நந்தி விருது

நான்கு தேசிய விருது:
களத்துார் கண்ணம்மா - 1960
மூன்றாம் பிறை - 1983
நாயகன் - 1988
இந்தியன் - 1996

19 'பிலிம்பேர்'விருது
ஐந்து மொழிகளில் 19 முறை 'பிலிம்பேர்' விருது பெற்று உள்ளார். இனி 'பிலிம்பேர்' விருது தனக்கு வேண்டாம், புதியவர்களுக்கு வழங்கும்படி 2000ல் கேட்டுக்கொண்டார்.

சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தனியார் 'டிவி' சேனலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை மூன்று முறை தொகுத்து வழங்கினார்.
 
தசாவதாரம் (2008) படத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட பத்து வேடங்களில் நடித்தவர்.


'ஆஸ்கர்' விருதுக்கு இந்தியாவில் இருந்து இவரது படங்களான நாயகன், 
தேவர்மகன், 
குருதிப்புனல்,
 இந்தியன், 
ஹேராம், 
சுவாதி முத்யம் (தெலுங்கு),  
சாகர் (இந்தி)
 ஆகிய படங்கள் அனுப்பப்பட்டது. 
 
 சொந்த குரலில் 90க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கமல்.
 
இதில் மிகப் பிரபலம் ,

'ஞாயிறு ஒளி மழையில்' - அந்தரங்கம்
'நினைவோ ஒரு பறவை' - சிகப்பு ரோஜாக்கள்
'தென்பாண்டி சீமையிலே' - நாயகன்
'சுந்தரி நீயும்' - மைக்கேல் மதன காமராஜன்
'கண்மனி அன்போடு' - குணா
'இஞ்சி இடுப்பழகி' - தேவர் மகன்
'கலக்கபோவது யாரு' - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,

மதுரையில் 2018 பிப்., 21ல் நடந்த விழாவில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை தொடங்கினார். 2019 ,மக்களவைத்  தேர்தல், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் (ஓட்டு சதவீதம் 3.72) தமிழகத்தில் நடந்தஇவரது கட்சி போட்டியிட்டது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...