bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 16 நவம்பர், 2019

திப்புவின் புலி

 கர்நாடக பாரதிய ஜனதா அரசு. திப்புசுல்தான் பற்றிய பாடங்களை வரலாற்று புத்தகங்களில் இருந்து நீக்கியுள்ளது.
திப்புசுல்தான் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒருவர் .



வெள்ளையருக்கெதிரான போர் இந்திய விடுதலை போராட்டத்தின் ஒரு அங்கம் என்பது நமக்கு தெரியும். 

ஆனால் பாஜக செயல் அவர் தேசிய தலைவரா?


 சுதந்திர போரட்ட வீரரா?


 சர்வாதிகாரியா என்ற பன்முககோண அலசலுக்கு வித்திட்டுள்ளது. 

கேரளா – கர்நாடக மாநில வட – தென் எல்லைப்பகுதியை உள்ளடக்கிய மலபார் பகுதி முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியாகும். 
அப்பகுதியைச் சேர்ந்தவர்தான் திப்புசுல்தான்.

“திப்பு” என்பது பன்முகத்தன்மை கொண்டவர் என்பது பொருள். “சுல்தான்” என்பது மன்னன் என்று பொருள்.
தற்போது இந்திய வரலாற்றில் கேரளாவை யொட்டியுள்ள மைசூர் பகுதியை தனது போரின் மூலம் கைப்பற்றி மைசூர் மகாணத்தை ஆண்டவர் திப்பு சுல்தான் என்பது வரலாறு.
தற்போது கர்நாடக பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கை (அவரது வரலாற்றைக் நீக்கியது) அவரைப்பற்றிய வரலாற்றை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளாவண்ணம் இருட்டடிப்பு செய்வதுதான்.

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனிக்கு சவால்விடும் வகையில் ஆட்சி செய்தவர். ஆங்கிலேருக்கு எதிரான மைசூர் போரில் உயர்ந்தவர்.
 ஆனால் போரினால் கேரளாவில் உள்ள மலபார் பகுதிகளையும், கர்நாடகாவில் உள்ள குடகு பகுதியையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தவர்.
 ஆனால் அவரது ஆட்சியின் கீழ் மாற்றுமதத்தினரையும் கையகப்படுத்திய பகுதியை சேர்ந்த மக்களையும் அவரது இராணுவத்தினர் நடத்திய விதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திப்புவின் ராணுவ வீரர்கள் மாற்று மதத்தினரை அவர் நடத்திய விதத்தையும் மதம் சார்ந்த தவறான கண்ணோட்டமாக கருதப்படுகிறது.

கர்நாடக அரசின் முடிவான திப்புசுல்தான் வரலாறு பற்றிய பாடங்கள் பள்ளிப்புத்தகங்களிலிருந்து நீக்கப்பட்ட விதம் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகிறது. 2013ல் கர்நாடகாவில் பதவியேற்ற காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் பிறந்த நாளை “திப்பு ஜெயந்தி” என்று அரசு விழாவாக கொண்டாடியது.
திப்பு சுல்தானை சுதந்திர போரட்ட வீரர் என்றே கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்து விழா எடுத்தது. இந்நிலையில் வரலாற்றில் திப்புசுல்தானை எவ்வாறு ஒப்பிடுவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கேரளாவில் உள்ள மலபார் பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்து திப்பு சுல்தானுக்கு எதிராகவே உள்ளது.
அப்போது கேரளாவில் துறைமுகங்கள் மூலமாக ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு ஏற்றுமதியும் மரங்கள் ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தது.
 இது மைசூர் மன்னனால் கண்காணிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 1766ம் ஆண்டு திப்புவின் தந்தையான ஹைதர் அலி தனது படையுடன் மலபார் பகுதிக்கு சென்று கண்ணனுரைச் சேர்ந்த முஸ்லிம் மன்னரிடம், அவரது ஆளுமைக்கு அடுத்துள்ள பகுதியை சேர்ந்த மன்னனான கொலித்ரி மன்னரை வீழத்தி கோழிக் கோடு சமஸ்தானத்தை கைப்பற்ற உதவுதாக உறுதியளித்தான்.
மலபார் பகுதியில் குறுநில மன்னர்கள் பிரிந்திருந்த வேளையில் மைசூர் மன்னன் மலபார் பகுதியை படையெடுத்து வென்றான்.
இதனால் கொச்சி சமஸ்தானமும் மைசூர் மன்னனின் கீழ் வந்தது.
 வீரர்களின் பிணக்குவியல் மத்தியில் திப்பு
இருப்பினும் ஹைதர் மற்றும் திப்புவின் கனவான தென்கேரளாவிலுள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கைப்பற்றும் கனவு நிறைவேறவில்லை.

கேரளாவை சேர்ந்த வரலாற்று நிபுணர் எம்.ஜி.எஸ். நாராயணன் “திப்பு தனது ஆளுமையின் கீழ் பல சமஸ்தானங்களை கொண்டு வரவேண்டுமென்ற தீராத வேட்கை கொண்டவர்”. அதிகாரத்திற்காகவே தனது ஆளுமையின் கீழ் பல்வேறு தென் பகுதிகளை கொண்டு வந்த பிறகு மாற்று மதத்தினரையும் தனது கருத்துக்கு உட்பட செய்தார், உன்றே குறிப்பிடுகிறார்.

குறிப்பாக மேல் ஜாதி இந்துக்களின் கலாச்சார நடைமுறைகளுக்கு மதிப்பளிக்காமல் புறந்தள்ளியதாகவும்;, இது போன்ற அடக்கு முறைகள் இந்திய, பிரிட்டீஷ் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திப்பு போர் திறனில் வலிமைமிக்கராகவும் சிறந்த நிர்வாக திறன் படைத்திருந்தாலும் அவரை தேசிய தலைவராகவோ அல்லது சுதந்திர போரட்ட வீரராகவோ கருத இயலாது என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள் கோவில்களை கொள்ளையடிப்பதையும், தடுத்தவர்களை கொலை செய்து அவரும் அவரது படையினர் வென்றவிதம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திருக்கிறது.
அத்துடன் இந்து பெண்களை கற்பழித்த செயல்பாடுகளும் அவரை சிறுமைப்படுத்தியுள்ளது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். அதே நேரத்தில் தனது ராணுவத்தில் கேரளா உயர் சாதி இந்துக்களையும் முக்கிய பொறுப்பில் நியமித்தார் திப்பு.
 அவரது ஆட்சியின் விரைவான சமூக, பொருளாதார மேம்பாடு ஏற்பட்டது.
சாதிய கட்டமைப்புக்களையும் தாண்டி நிலசீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. மலபார் பகுதியில் உயர் சாதி மக்களான நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் ஆட்சியில் இருந்த பெரும்பாலான நிலங்கள் நிலமில்லாத சமுதாய மக்களுக்கு மாறின.
ஹைதர் அலி காலத்தில் தான் முதன் முதலாக நில சர்வே நடைபெற்றது. நிலவரி கட்டாயமாக்கப்பட்டதால் நிலச்சுவான்தார்கள் திப்பு சுல்தான் மீது அதிருப்படைந்தனர் என்று வரலாற்று போராசிரியர் முனிபூர் ரஹ்மான் தொவிக்கிறார்.
திருவனந்தபுரத்திலுள்ள கல்வி மையத்தின் வரலாற்று ஆராய்ச்சியாளர் தேவிகா திப்பு மலபார் பகுதியிலுள்ள ஏழை முஸ்லிம்களை மட்டும் தான் திப்பு அதிகாரம் படைத்தவர்களாக மாற்றினார் என்று குறிப்பிடுகிறார்.
அவர்களுக்கு நிலமானியங்களை அள்ளி வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரலாற்று ஆய்வாளர் திப்புவை வரையறை செய்ய இயலாது.
அவரது காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளுக்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என்று குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்று ஆளுமை கொண்ட திப்புவின் மீதான நிகழ்வுகள், நிழல்களாக நம் கண்முன் தோன்றுகின்றன.
வரலாற்று ஆராயச்சியாளர்கள் பிரிவினைவாதிகள் அல்ல ஆனால் வரலாற்று நிகழ்வுகளை தங்களது குறுகிய லட்சியங்களுக்கான பயன்படுத்துபவர்கள் தான் பிரிவினைவாதிகள்.
மன்னர் என்பவர் கூட்டு ஆளுமை குணாதிசயங்களை கொண்டவர்.
அவரது ஆட்சியின் முடிவுகள் அப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அமையும் ஆனால் நம்மில் பலர் வரலாற்று ஆளுமைகளுக்கு பல்வேறு வகையில் வண்ணங்களை தீட்டி வருகிறோம்.
திப்புசுல்தான் தேசிய தலைவரா?
சுதந்திரா போராட்ட வீரரா?
சர்வாதிகாரியா?
என்று விவாதிப்பதைவிட அவர் ஒரு சூழலுக்கு ஏற்றவாறு செயல்பட்டார் என்பதையும் மறுக்க முடியாது.
திப்புவின் புலி - ஆங்கிலேய சிப்பாயின் குரல்வளையை கவ்விப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்ட இசைக்கருவி
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. உயர்கல்வி நிறுவனம் சாதி, மதத்தின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் கொலைக்களமாக மாறியிருப்பதை பாத்திமா லத்தீப் மரணம் உறுதி செய்திருக்கிறது.

கடந்த 8ஆம் தேதி கேரள மாநிலம் கொள்ளத்தை சேர்ந்த பாத்திமா என்ற மாணவி சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மகளிர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவியின் செல்போனை அவரது குடும்பத்தினர் ஆராய்ந்த போது, அதில் தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம் என மாணவி பதிவிட்டுள்ளார்.
அவர்கள் மதரீதியாக தவறாக பேசியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவியின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், மாணவியின் இந்த பதிவு, தற்கொலைக்கு முந்தைய நாள் அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.
அமைதியான பெண், மானுடவியல் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னை ஐ.ஐ.டி.,க்கு வந்தவர் பாத்திமா.
அவரது பெயர்தான் அவர் சாவுக்கு காரணமா?.
 தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் தானே என் மகளை படிப்பதற்காக சென்னைக்கு அனுப்பினேன் என்று அந்த மாணவியின் தாய் கண்ணீர் வடிக்கும் போது, நம் மனசாட்சி நீதிதேவதையை நோக்கி நியாயக் கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, பேராசிரியர்கள் சுரண்டுபவர்களாகவும்,மாணவர்கள் அறிவுத்தளத்திலும், பொருளாதாரரீதியாகவும், கலாச்சாரரீதியாகவும் சுரண்டப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசின் தவறான கல்விக் கொள்கைகளை இத்தகைய நிலையை ஏற்படுத்தியுள்ளன.

ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பட்டப்படிப்பின் இறுதியாண்டில் ஆய்வு வழிகாட்டியாக இருக்கும் குறிப்பிட்ட பேராசிரியரை மட்டுமே சார்ந்துள்ளது.
அதுபோல ஐஐடி-க்களை பொறுத்தவரை பாடத்திட்டம் பற்றி மையப்படுத்தப்பட்ட விதிமுறைகளில்லை. உதாரணமாக பல துறைகளிலும் கடைசி செமஸ்டரில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வேட்டையும், வாய்மொழித்தேர்வையும் வைத்தே மாணவ, மாணவிகளுக்கு கிரேடு எனும் தகுதி வழங்கப்படுகிறது.

ஒரு மாணவன் எடுக்கும் தகுதி மதிப்பெண்ணை வைத்தே அவன் எதிர்காலம் நிச்சயிக்கப்படும்.
அது, சம்பந்தப்பட்ட பேராசிரியரின் கையில்தான் இருக்கிறது. அதாவது, ஐ.ஐ.டி.,யில் படிக்கும் ஒரு மாணவன் அல்லது மாணவியின் எதிர்காலமே சம்பந்தப்பட்ட பேராசிரியர் வசம் சென்றுவிடும்.
அவர் நினைத்தால் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே மத்திய அரசின் உயர்கல்வி கொள்கையாக உள்ளது.
ஐஐடி போன்றஉயர்கல்வி நிறுவனங்கள் இன்னும் உயர் சாதியினரிடம் சிக்கியிருக்கிறது. படிக்க வரும் உயர் சாதியல்லாத மாணவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடுமையாக தொல்லைகளுக்கு ஆட்பட வேண்டியிருக்கும் என்ற கேவலமான நிலை உள்ளது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கூட முழுமையாக வழங்கப்படுவது இல்லை.

ஒரு மாணவனோ, மாணவியோ பேராசிரியரால் பாதிக்கப்பட்டால் யாரிடமும் முறையிட முடியாது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதால், இரு தரப்பு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தாக்குதலில் சூரஜ் என்ற மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஓர் அறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

சுதர்சன் பத்மநாபன்
சமீபத்தில் ஐ.ஐ.டி சைவம் மற்றும் அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு எனத் தனித் தனி வழி ஒதுக்கப்பட்டதாகப் பிரச்னை எழுந்தது.
இப்படி நவீன தீண்டாமைகள் சென்னை ஐ.ஐ.டி.,யில் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சென்னை ஐ.ஐ.டி.,யில் 14 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு மேமாதம் சந்திப் என்ற வட இந்திய மாணவர் தற்கொலை,
2011ம் ஆண்டு பிப்ரவரியில் அனூப் வலாப்ரியா என்ற மாணவர் தற்கொலை,
2011 ஆம் ஆண்டு மே மாதம் நிதின்குமார் ரெட்டி என்ற மாணவர் தற்கொலை,
2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெருகு மானசா என்ற மாணவி தற்கொலை,
 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவைச் சேர்ந்த மாணவன் ஷஹல் கொர்மத் தூக்கிட்டுத் தற்கொலை,
 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவி ரஞ்சனா குமாரி என்பவர் தூக்கிட்டுத் தற்கொலை, கடந்த ஜனவரி மாதம் 28ந் தேதி உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் கோபால்பாபு தற்கொலை, இப்போது பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவியின் தற்கொலை என ஐ.ஐ.டி கல்விக்கூடம், கொலைக்கூடமாக உள்ளது.
 இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஒரு பெண் பேராசிரியரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஐ.ஐ.டி.,யில் நிகழும் ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னரும் ஒவ்வொரு கதை ஜோடிக்கப்படும். பத்திரிகையாளர்கள் கூட ஐ.ஐ.டி.,க்குச் சென்று செய்தி சேகரிக்க முடியாது. காவலாளிகளை ஏவி பேராசிரியர்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள்.
இதெல்லாம் கடந்த கால நிகழ்வுகள்.
தற்போது பாத்திமா லத்தீப் முக்கியமான தடயத்தை விட்டுச் சென்றுள்ளார்.

சாதி, மத ஆதிக்க அரக்கனான அந்த பேராசிரியர் சுதர்சன பத்மநாபனையும், மற்ற சாதி வெறியர்களையும் அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்தியா முழுவதிலிருந்து பாத்திமா மரணத்திற்கு நீதிகேட்டும், சாதி- மத வெறியர்களுக்கு தண்டனை அளிக்கக்கோரியும் போராட்டக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மாணவர்கள் அணி, அணியாக திரள்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி., போராட்டக்களமாக மாறி உள்ளது.
படித்தவன் சூதும், வாதும் பண்ணினால்... போவான்.. போவான் அய்யோ எனப் போவான் என்ற பாரதியின் கவிதை வரிகள் சுதர்சன பத்மநாபன்களை நினைவுப்படுத்துகின்றது.
 கல்வி நிலையங்களில் இந்துத்துவகும்பல்களின் அத்துமீறல் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதை சுதர்சன பத்மநாபன்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அமைதியான மாநிலம் என்று நம்பித்தானே என் மகளை அனுப்பினோம்... என் மகளை இப்படி செய்துவிட்டீர்களே...” என அந்த மாணவியின் தாய் கேட்டபோது தமிழர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டுமா?
அநீதிக்கு எதிராக கொதிக்க வேண்டுமா?

கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.
தமிழர்கள் மதசார்பற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய காலம் இது. 
உயர்கல்வியில் மதம் கோலோச்சுவதை எதிர்த்து, சிறுபான்மையினருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் ஆதரவாக  அணைவரும் குரலை உயர்த்த வேண்டிய நேரம் இதுதான்!
 நன்றி:கலைஞசர் செய்திகள் 
 -------------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...