ஒருவருக்கொருவர் சளைத்ததில்லை ...,
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை
உருவாக்குவேன் என்று ஆரவாரமாக பேசி ஆட்சிக்கு வந்த மோடி, தான் விரித்த பொய்
வலையில் தானே சிக்கிக்கொண்டார்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக
தனது பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்துவதற்காக, 2011 ஆம்
ஆண்டிலிருந்தே பொய்ப் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது.
எதிர்க்கட்சிகளில் ஆறு
நாளைக்கு ஆறு பிரதமர் என்று கேலி பேசுகிறார் பாஜக தலைவர் அமித் ஷா.
ஆனால்,
பாஜகவுக்காக ஒரு பிரதமர் வேட்பாளராக அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை இந்திய மக்களிடத்தில் வல்லவர்,நல்லவர் என்று மோடி வித்தை காட்ட 3 ஆண்டுகளும் அதற்கான போட்டோஷாப் செலவினங்கள்,ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் முப்பரிமாண மாயத்தோற்றத்தில் தோன்றி மக்களை ஏமாற்றி வாய் கிழிய பேச ஏன்று
30
ஆயிரம் கோடி ரூபாய் பிரச்சார செலவும் ஆனதை மறந்துவிட்டார்.
10 லட்சம் ரூபாய்க்கு மோடி என்று தங்க இழைகளால் நெய்யப்பட்ட கோட் சூட்டை அணிந்து காட்சி அளித்தார்.
வளர்ச்சி, வளர்ச்சி என்று மோடி
பேசியதெல்லாம் இந்த வளர்ச்சியைத்தானா என்று சாமானியர்களே கேட்கும் நிலை
உருவானது.
அம்பானி, அதானி, வேதாந்தா
உள்ளிட்ட இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சேவகம்
செய்ததைத் தாண்டி எதுவுமே செய்யவில்லை என்ற உண்மை நாட்டு மக்களுக்கு
தெரிந்துவிட்டது.
மோடி ஒரு மோசடிப் பேச்சாளர் என்பது அம்பலமான
பிறகு, இந்திய மக்கள் விழித்துக்கொண்ட பிறகு கடைசிக்கட்ட ஏமாற்று
முயற்சிகளை பாஜகவும் மோடியும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், கடந்த
நான்கு ஆண்டுகளாக வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களை வெளியிடாமல் மறைத்து வந்த
மோடி அரசின் பித்தலாட்டத்தை அந்த புள்ளியியல் துறையில் இருக்கும்
அதிகாரிகளே குற்றம் சொல்லி விலகியதன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக அந்த புள்ளிவிவரம்
தெரிவிக்கிறது.
2011-2012 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய
ஒன்றியத்தின் வேலையில்லா திண்டாட்டம் 2.2 சதவீதமாக இருந்தது. ஆனால், அது
இப்போது நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமாகம், கிராமப்புறங்களில் 5.3
சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது என்று தேசிய புள்ளியியல் கமிஷன் அறிக்கை
தெரிவிக்கிறது.
தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் புள்ளிவிவர அறிக்கையை
வெளியிடாமல் பதுக்கி வைத்ததின் மூலம் நம்பகத்தன்மையை அரசு இழந்திருக்கிறது .
2011 ஆம்
ஆண்டுக்கும் 2015 ஆம் ஆண்டுக்கும் இடையிலேயே ஏராளமான வேலைவாய்ப்பின்மையை
நாங்கள் அறிந்தோம்.
மோடியின் பணமதிப்பிழப்பு கடுமையான விளைவுகளை
ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தோம்
என்று தொழில்துறை பொருளாதார நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
வேலையின்மை அதிகரிக்கும்போது தொழிலாளர் பங்கேற்பு விகிதாச்சாரம் குறைந்தால் கடுமையான விளைவை ஏற்படுத்தும் .
தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின்
புள்ளிவிவரத்தின்படி 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள்
மத்தியில்தான் வேலையின்மை அதிகரித்திருக்கிறது என்று வேலை தேடும் இளைஞர்
அமைப்பின் நிறுவனரான அனுபம் தெரிவித்தார்.
பணமதிப்பிழப்புக்கு பிறகு கடந்த
இரண்டு ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கோபத்தை நாங்கள்
பார்த்தோம் என்கிறார் அவர்.
உண்மை நிலைமை இப்படி இருக்க மத்திய அரசு
முழுப்பூசணிக்காயை பிடி சோற்றுக்குள் மறைக்கும் முயற்சியை பட்ஜெட் மூலம்
மறைக்க பார்க்கிறது.
வேலைவாய்ப்பு மிகக்கொடுமையாக வளர்ந்திருக்கிறது என்று தேசிய புள்ளியில் துறையே ஆதாரங்களுடன் குறி மோடி அரசின் கையலகத்தனத்தை மக்கள் மத்தியில் அசிங்கப்படுத்தியுள்ள அதே காலத்தில் எந்த வித குற்ற மனப்பான்மையும் ,வெட்கமுமில்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்கையில் மக்களவையிலேயே கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி
இருப்பதாக தற்போதைய நிதியமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருக்கிறார்.
பொய்களை வாய்க்கூசாமல் வாரியிறைப்பதில் பாஜகவினர் ஒருவருக்கொருவர் சளைத்ததில்லை என்பது மீண்டும் மக்களவையிலேயே உண்மையாகியிருக்கிறது.
அதை இந்திய மக்கள் யாரும் நம்பவில்லை என்பதற்கு அவர்களை இதுவரை நம்பி கெட்டுப்போன வடமாநில விவசாய மக்களே பதில் சொல்லியுள்ளார்கள்.
“பணமதிப்பிழப்புக்கு முன்னர் மாதத்தில் 20
நாட்கள் வேலை செய்தோம். ஆனால், இப்போது 10 நாட்கள் வேலை கிடைப்பதே பெரிய
விஷயமாக இருக்கிறது”
------------------------------------------------------------------------------------------------------------------------------------
காணொளியில் வந்தாலுமா எதிர்ப்பு?
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல்
நாட்டு விழாவிற்கு வந்த இந்திய பிரதமர் மோடிக்கு தமிழகமே கருப்பு கொடி
காட்டியது.
இந்நிலையில் தேர்வுகால பதற்றத்தை கையாள்வது எப்படி என்ற
மோடியின் நேரலை நிகழ்ச்சி திருச்சியில் ஈவேரா பெரியார் கல்லூரியில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி ஹிந்தியில் “பரிக்ஷா பே
சர்ச்சா 2.0’’ என்ற பெயரில் நடக்கவிருந்தது .
இந்த
நிகழ்ச்சிக்காக மாணவர்கள் பங்குபெற கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு
செய்திருந்தது.
இதனைப் நிராகரித்த மாணவர்கள் அந்நிகழ்வில்
கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
மேலும் இது கல்லூரி கலையரங்கமா? மோடியின்
விளம்பர இடமா? என்று கேள்வி எழுப்பி அரங்கம் அதிர ஒலி எழுப்பினர்.
இது தேர்வு பயிற்சிக்காக இல்லாமல்தேர்தலுக்காக நடத்திய ஒன்று என்று
முழக்கங்களை எழுப்பினர். கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்ப மாணவர்கள் கலைந்து சென்றனர்.மோடியின் நேரலை
நிகழ்வு நிறுத்தப்பட்டது.
நேரில் வந்தால்
மட்டுமல்ல நேரலையில் வந்தாலும் எதிர்ப்புதான் என்பதை காட்டுவதாக இருந்தது
இந்த சம்பவம்.
மோடியை ஒரு பிரதமர் என்றே தென்னாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டேன்கிறார்கள்.
அதாவது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஒப்புக்கொள்ளாததைப்போலவே.
===================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக