bloggiri.com - Indian Blogs Aggregator

சனி, 13 அக்டோபர், 2018

அடுத்த 48 மணி நேரம். இணையம்?

இன்றும் நாளையும் இணைய சேவைகளை பயன்படுத்தும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கவலைப்படாமல் வேறு வேலை பார்த்து விட்டு, இணையத்திற்கு திரும்பி வாருங்கள். ஏனெனில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையதளம் முடங்குவது, இணைய சேவைகள் மெதுவாவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த தற்காலில் இணைய முடக்கத்திற்கு நீங்கள் தயாராக இருங்கள்.
ஏன்? 
இணையத்தில் என்ன பிரச்சனை? 
எதனால் இந்த முடக்கம் என பதற்றம் அடைய வேண்டாம். இணையத்தை முறையாக பராமரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணி கொஞ்சம் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட இருப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் இணையத்தில் அணுகுவதில் கொஞ்சம் பிரச்சனை ஏற்படலாம்.
டொமைன் பெயர்கள் என குறிப்பிடப்படும் இணைய முகவரிகளை நிர்வகிக்கும், ஐகான் என சுருக்கமாக குறிப்பிடப்படும் இண்டெர்நெட் கார்ப்பரேஷன் பார் அசைண்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் அமைப்பு தான், இந்த பராமரிப்பு பணியை மேற்கொள்ள இருக்கிறது. 
இது தொடர்பான செய்தியை ரஷ்ய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐகான் அமைப்பு, டொமைன் சர்வர்கள் மற்றும் தொடர்புடைய நெட்வொர்க்கின் பராமரிப்பு பணியை க்ரிப்டோகிராபிக் கீயை அப்டேட் செய்வதன் மூலம் மேற்கொள்ள உள்ளது. இதன் விளைவாக இணைய சேவை தற்காலிகமாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
மாற்றத்திற்கு உள்ளாக இருக்கும் கிர்ப்டோகிராபி கீ தான், டொமைன் நேம் சிஸ்டத்தை (டி.என்.எஸ்) பாதுகாக்கிறது. டி.என்.எஸ் அமைப்பை இணையத்திற்கான முகவரி புத்தகம் என வைத்துக்கொள்ளலாம். 
இது பிரவுசர்களில் நாம் டைப் செய்யும் இணைய முகவரிகளை புரிந்து கொண்டு, அதற்குறிய பொருத்தமான டொமைன் முகவரி மற்றும் ஐபி முகவரியுடன் இணைத்து சேவை அளிக்கிறது. இதன் மூலம் தான் நீங்கள் செல்ல விரும்பும் இணைய பக்கம் பிரவுசரில் தோன்றுகிறது. 
எல்லா டொமைன் முகவரிகளும் இந்த புத்தகத்தில் பதிவாகி உள்ளன. இந்த முறையில் தான் இணையத்தில் போக்குவரத்து சமாளிக்கப்படுகிறது. 
அதாவது இணைய முகவரியை டைப் செய்ததும் அதற்குரிய பக்கங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவது நடைபெறுகிறது.
இந்த முகவரி முறைக்கான க்ரிப்டோகிராபி கீயை தான் அப்டேட் செய்யும் அவசியம் ஐகானுக்கு ஏற்பட்டுள்ளது. இணையத்தில் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு மீறல் அதிகரித்து வரும் நிலையில் இணைய பாதுகாப்பை மேம்படுத்த க்ரிப்டோகிராபி கீயை மேம்படுத்தும் தேவை ஏற்பட்டுள்ளது. இதைத் தான் ஐகான் திட்டமிட்டுள்ளது. 
இந்த அப்டேட் செய்யப்படும் போது தொடர்புடைய இணைய பக்கங்கள் தற்காலிகமாக அணுக முடியாமல் போகலாம். அதாவது இந்த பக்கங்கள் தற்காலிகமாக காணமால் போவதாக வைத்துக்கொள்ளலாம். இதற்கு மாறாக சில பக்கங்கள் மெதுவாகவும் செயல்படலாம். 
இதை தான் இணையம் முடங்கும் பாதிப்பு இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
டொமைன் பெயர் அமைப்பிற்கான பராமரிப்பால் என்ன ஆகும்? முழு இணையமும் முடங்குமா? 
இல்லை அப்படி நடக்காது. 

ஐகான் மேற்கொள்ளும் அப்டேட் முயற்சியால் முழு இணையமும் முடங்கிவிடாது. இது பகுதி பகுதியாக மேற்கொள்ளப்படும் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் சில இணையதளங்களில் சிக்கல் ஏற்படலாம். அப்டேட் முடிந்ததும் எல்லாம் பழைய நிலைக்கு மாறிவிடும்.
இது தொடர்பான ஐகான் நடத்திய பரிசோதனையில் உலகில் உள்ள ஒரு சதவீத இணைய பயனாளிகள் தான் இதனால் பாதிக்கப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது. 
ஆனால் ஏடிஎம் சேவை போன்றவை பாதிக்கப்படும் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.
சரி, இந்த இணைய முடக்கத்தின் போது பயனாளிகள் என்ன செய்ய வேண்டும்?ஒன்றும் செய்ய வேண்டாம் என்பதே விஷயம். இணையதளம் மெதுவாக லோடு ஆனால் காத்திருக்கலாம். 
வீட்டில் உள்ள ரவுட்டரை மீண்டும் இயக்கிப் பார்க்கலாம். தொடர்ந்து பிரச்சனை நீடித்தால், இன்னும் அப்டேட் முடியவில்லை என காத்திருக்க வேண்டியது தான்!
எல்லாம் சரி, எதிர்காலத்திலும் இதே போல முடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா? 
நிச்சயம் உள்ளது. 
ஏனெனில், ஐகான் பராமரிப்பு பணியை மேற்கொள்வது இது முதல் முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல. 
சொல்லப்போனால், எதிர்காலத்தில் டி.என்.எஸ் அமைப்பில் அடிக்கடி அப்டேட் தேவைப்படலாம் என ஐகான் தெரிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பற்றி ஐகான், இணைய சேவை நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. எனவே உங்கள் ஐஎஸ்பி நிறுவனம் தயாராக இருந்தால் பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்காது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...