bloggiri.com - Indian Blogs Aggregator

செவ்வாய், 9 அக்டோபர், 2018

தேசத் துரோகம்?

இன்று தேசத்து துரோகம் என்றால் என்ன என்பதுதான் முக்கிய கேள்வியாக இந்தியா முழுக்க சுழல்கிறது.

 தேசாய் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய ரபேல் விமானத்தை முறைகேடாக ஒப்பந்தம் செய்து விட்டு அதை இந்திய விமானங்கள் தயாரிப்பதில் பல்லாண்டுகள் அனுபம் உள்ள எச்.ஏ.எல் க்கு கொட்டாமல் விமானத்தில் பயணம் மட்டுமே செய்து வந்த அணில் அம்பானிக்கு துவக்கிய 16 நாட்களிலேயே அவர் நிறுவனத்துக்கு விமான ஒப்பந்தத்தை கொடுத்துவிட்டு அதை பற்றி கேள்வி கேட்டால் தேசப் பாதுகாப்புக்கான விடயத்தில் கேள்வி கேட்பது தவறு என்கிறது மோடியின் பாஜக அரசு.

ஆயிரங்கோடிகள் விமான ஒப்பந்தத்தை எடுத்திருக்கும் அணில் அம்பானி நிறுவன முதலீடு எவ்வளவு தெரியுமா?வெறும் 5லட்சம்.

அனுபவம் வெறும் 16 நாட்கள்.இந்நிறுவன தலைவர் அம்பானி 45000 கோடிகள் கடன் வைத்திருப்பவர்.அவரின் தொலைத்தொடர்பு நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்  மூடப்பட்டுள்ளது .காரணம்  எதிராளி நிறுவனங்களை எதிர்த்து தாக்குப்பிடித்து நடத்த நிர்வாகத்திறமையின்மைதான்.

மேலும் அணில் அம்பானி தங்களுக்கு தரவேண்டிய கடனை பல ஆண்டுகளாகத் தராததால்  அவரும் அவர் குடும்பத்தினரும் விஜய் மல்லையா,நீரவ் மோடி,லலித் மோடி வரிசையில் நாட்டை விட்டு ஓடிவிடாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்காக கூடாது என எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை கட்டியுள்ளது.

மத்திய அரசை ஆளும் பாஜக லட்சணம் இப்படி இருக்கையில் அவர்கள் நியமித்த ஆளுநர்கள்?
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்   -   ,நிர்மலாதேவி என்பவர் வழக்கில் மாட்டிக்கொண்டுள்ளார்.
அதை பற்றிய செய்திகளை வெளியிட்ட நக்கீரன் வாரமிருமுறை இதழ் ஆசிரியர் கோபால்   கைது செய்யப்பட்டுள்ளார் .காரணம் ஆளுநர் தனது பணியை செய்ய விடாமல் தடுத்த தேசத்துரோகமாம்.ஆளுநர் எந்த பணியை செய்யவிடாமல் தடுத்தார் என்ற கேள்விதான் நம்முள் எழுகிறது.


 ஆளுனரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்-நிர்மலாதேவி விவகாரத்தை வெளியிட்டதற்காகத்தான் தேசத்துரோக வழக்கு   124 (a) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாம் .

 124- சட்டப்பிரிவானது, குடியரசு தலைவர் மற்றும் 
ஆளுநரின் நற்பெயருக்கு தொடர்ந்து களங்கம் ஏற்படுத்துபவர்களை தேச விரோத வழக்கில் கைது 
செய்ய வழிவகை செய்கிறது. 

மேலும் இந்த குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் வரை 
அபராதத்துடன் தண்டனை விதிக்கவும் முடியும்.

ஆனால் நக்கீரன் கோபால் தனிப்பட்ட முறையில் இவ்விவகாரத்தை ஆளுநர் மீதான களங்கத்திற்காக வெளியிடவில்லை.
கைது செய்யப்பட ஒருவரின் வாக்குமூலத்தைத்தான் தனது புலனாய்வு இதழில் வெளியிட்டுள்ளார்.

இதற்கு மானநஷ்ட வழக்கைத் தொடர்வதுதான் சரியாக இருக்கும் என்பது சட்டத்துறையினரின் கருத்து.
 எதுதான் தேசத்துரோகம் என்றே தெரியவில்லை.
ஆளுநர் ,பிரதமர்கள் செய்யும் முறைகேடுகளை சுட்டிக்காட்டினால் தேச விரோதி,தேசத் துரோகம்,சமூக விரோதி,நக்சலைட் ,மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்துவதும்,நாடெங்கும் இடதுசாரி பத்திரிகையாளர்கள்,எழுத்தாளர்கள்,சமூக செயல்பாட்டாளர்கள் இந்த பிரிவுகளில் கைது செய்யப்படுவதும்,தாக்கப்படுவதும் இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லாத பாசிச ஆட்சி நடப்பதாகத்தான் தெரிகிறது.

ஆளுநர் தன மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டால் அதற்கு வழக்குப்பதிவு செய்தாலே போதுமே?
உண்மை வெளிவருமே!தன்னை சுத்தமானவராகக் காட்டலாமே.
அதை விடுத்து பணியாற்ற விடாமல் தடுத்ததாக தேசத்துரோக வழக்கை பதிவு செய்வது சரியான முறையா?  என்பதுதான் நம்முன் எழும் கேள்வி.
இந்த பரபரப்பான கைதினால் நிர்மலாதேவி விவகாரத்தில் பன்வாரிலால் புரோஹித் பெயர் அடிபடுவது இதுவரை தெரியாத பாமரர்களுக்கு,வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டப்படுமே தவிர வேறு எதிர்பார்த்த பயன் நிச்சயம் ஆள்வோருக்கு கிட்டாது.
இக்கட்டுரை வெளியாகும் கட்டத்தில் எழும்பூர் நீதிமன்றம் இவ்வழக்கில் தேசத்துரோகத்திற்கான முகாந்திரம் இல்லை.
ஆளுநரின் எந்தப் பணியை கோபால் தடுத்தார் என்பதை விளக்கமாகக் கூறவில்லை.என்று கூறி "நக்கீரன் கோபாலை நீதிமன்றக்காவலில் வைக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி விடுவித்துள்ளது.
தினசரி நாளிதழ்,புலனாய்வு இதழ்கள்  வாசிப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஆளுநர்   பன்வாரிலால் புரோஹித்-   நிர்மலா தேவி -கல்லூரி மாணவிகள் அழைப்பு விவகாரத்தை (தொலைக்காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் மவுனம்)இன்று நக்கீரன் கோபால் கைது மூலம் தமிழகத்தின் கடைக்கோடி வரை கொண்டு சென்ற ஆளுநர் மாளிகைக்கு நன்றிதான் கூற வேண்டும்.
இன்றைய விவாதப்பொருளே நக்கீரன் கோபால் கைது,காரணம் அவர் செய்த தேசத்துரோகம் என்ன என்பதுதான்.
சொந்தக் காசில் சூனியம் வைப்பது தானே இது.?
நிர்மலாதேவி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...