bloggiri.com - Indian Blogs Aggregator

புதன், 28 நவம்பர், 2018

அகர்வால்களின் ஆய்(வு) அறிக்கை

 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தமிழக அரசு 48 ஏ பிரிவின்கீழ் ஸ்டெர்லைட் ஆலை யை மூடியது. இப்போது வேதாந்தா குழுமத்துக்கு நீதிபதி அகர்வால் தலைமையிலான கமிட்டி ஊது குழலாக செயல்படுவது போல் தோன்றுகிறது.
உண்மையில் ஆய்வுக்குழுவின் வேலை என்பது ஸ்டெர்லைட் ஆலை குறித்து மக்கள்கருத்துக்களை அறிந்து அறிக்கை யாக தாக்கல் செய்வது மட்டுமே. ஆனால் அகர்வாள்களால் அமைக்கப்பட்ட பசுமை தீர்ப்பாயக்குழு அறிக்கை மக்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும்,அது தங்கியுள்ள பசுமை க்கும் எதிரானது.

இதுவரை இந்தியா முழுக்க சுற்றுசுசுழல்,இயற்கை வழங்களைப்பதுக்காக்க அமைக்கப்பட்ட   பசுமை தீர்ப்பாயம் அறிக்கை,தீர்ப்பு என்பது நாசகார ஆலைகளுக்கு,முதலாளிகளுக்கும் மட்டுமே ஆதரவாகவுள்ளது.
எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகி இயற்கை வளத்தை அழிக்கும்,சுற்று சுழலுக்கு கேட்டுவிளைவித்து காற்றையும்,நிலத்தடி நீரை விஷமாகும் ஆலைகளுக்கு அதன் முதலாளிகளுக்கு ஆதரவாகவே அமைந்து வருகிறது.
ஒரு தீர்ப்பு கூட  வாழ்வதற்காகப்போராடும் மக்களுக்கு ஆதரவாக பசுமைத் தீர்ப்பாயம் அளித்ததாக வரலாறே இல்லை.
பின் எதற்கு இந்த பசுமைத் தீர்ப்பாயம் ?

போராடும் மக்களை அவர்களின் போராட்டக்குணம் நீர்த்துப்போகவும் மக்களை திசை திருப்பி விரக்தி மனப்பான்மைக்குத்தள்ளவுமே இந்த தீர்ப்பாயம் கார்ப்பரேட் அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஸ்டெர்லை அலை முதல் நீதிக்கு எதிரானது என்று வாய்க்கிழிய தீர்ப்பில் முழங்கியுள்ள கண்டித்துள்ள அணில் அகர்வால் நண்பர்  தருண் அகர்வால் "ஸ்டெர்லைட் ஆலை தனக்கு ஆணையிடப்பட்ட பசுமை வேலி ,கொதிகலன் மாசு வடிகட்டி,கழிவுகளை அப்பறப்படுத்தும் வழிகள்,தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் விதிகளை மீறி இயங்கியதையோ,மாத்தி வாங்கும் முன்னரே நாசகார ஆலையையும்,அதன் விரிவாக்கத்தையும் இயக்கியதை கண்டித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்க வில்லை.
மக்கள் விரோத முதலாளித்துவ (அகர்)வால்கள் .

ஆளை இயங்கலாம் என்ற தீர்ப்பில் அது விதிகள் படி ஏற்பாடுகளை செய்தபின்னர் இயங்கலாம் என்ற ஒரு அறிவுரையை கூட தருண் அகர்வால்,அணில் அகர்வாலுக்கு கொடுக்கவில்லை.


நீதி மீறப்பட்டுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் தருண் அகர்வால் ,தனது நீதி என்பதற்க்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.


மக்களுக்கு நன்மை உண்டாக்குவது நீதியா ,மக்கள் அழிந்தாலும் சரி எனது நாசகார ஆலையை இயக்கி கப்பல்,கப்பலாக பணத்தைக்கொள்ளையடிப்பேன் என்கினற தனி முதலாளி,

அதுவும் தஸ்ஒருசாலை ராபத்தி வரவு-செலவுகளை வரி ஏய்ப்பு செய்கினறவனுக்கு மேலும் செய்கினற நன்மை நீதியா?
இதை அணிலாகர்வால்,அம்பானிகள்,மோதிகள்,அதானிகள் உறவின் முறை குஜராத்தியும்  ,நரேந்திர மோடியால் ஸ்டெர்லைட்  ஆய்வுக்காக அந்தநேரம் பசுமைத் தீர்ப்பாய ஆணையராக நியமிக்கப்பட்டவருமான தருண் அகர்வால் தெளிவுபடுத்துவாரா?

அதனை விட்டு, ஆலை இயங்கு வது குறித்து முடிவைக் கூறுவது அதன் வேலை அல்ல.தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இடையே ஸ்டெர்லைட் ஆலை குறித்த ஒரு ஒருமித்த கருத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையைநிரந்தரமாக மூடுவதற்கு தீர்மா னித்து, அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

 சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை செயல்படலாம் என்று தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள தூத்துக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.
மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கின்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதில் காவல்துறையினர் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பெரும் போராட்டம் எழுந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சீராய்வு மனுவும் தள்ளுபடியானது. இதனிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமை யிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல்கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களைப்பெற்றனர்.

இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை தனித்தனி யாக மூடி முத்திரையிடப்பட்ட 48 உறைகளில் வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது.
ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது .
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவ தோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்” என்று பரிந்துரைத் துள்ளதாக கூறப்படுகிறது.
 இந்த ஆய்வறிக்கை யை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
தருண் அகர்வால் குழுவின் அறிக்கையால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெஹ்வால் மாநிலங்களவையில் ஸ்டெர்லைட் ஆலை அமைந்திருக்கும் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம்மேற்கொண்ட ஆய்வில் நிலத்தடி நீர் மாசுபட்டுஇருப்பதும், ஈயம், காட்மியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு , அர்சினிக் ஆகியவை நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதுஉறுதி செய்யப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.

ஆனால் தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த தருண் அகர்வால் தலைமையிலான குழு தமிழக அரசு ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு முறையாக நோட்டீஸ் கொடுக்காமல் ஆலையைமூடியது இயற்கை நீதிக்கு மாறானது என கூறியிருக்கிறது.

முறையாக அனுமதி பெற்று இயங்கும் ஒரு நிறுவனத்தை மூட வேண்டும் என்றால்நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்பது இயற்கைநீதி. ஆனால் ஆலையை இயக்குவதற்கான உரிமத்தையே புதுப்பிக்க அரசு மறுத்துவிட்ட நிலையிலும் ஆலை இயங்கி வந்தது.
அந்தநிலையில்தானே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீலிட்டது.


அது எப்படிஇயற்கை நீதிக்கு முரணாகும்.
 நீதிபதி தருண் அகர்வால் குழுவின் வாதம்தான் இயற்கை நீதிக்கு மாறானதாக இருக்கிறது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் குழுவின் அறிக்கை, ஆலையைமீண்டும் திறக்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய்,தோல் வியாதிகள்,சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை,அரசே ஆலையி சுர்ருலுமுள்ள நிலத்தடி நீர் குடிக்க முடியாத நிலையில் ரசாயனக்கலப்பு ள்ளது என்று அறிக்கை கொடுத்துள்ளது,எல்லாவற்றுக்கும் மேலாக பல ஆண்டுகளாக மக்கள் ஸ்டெர்லைட் ஆளை எதிர்ப்பு போராட்டம் நடத்துவது,உச்சக்கட்டமாக 13 பேர்கள் ஆளை நிர்வாகத்திற்கு ஆதரவாக காவல்துறை சுட்டுக்கொன்றது போன்ற எதையுமே ஆய்வில் எட்த்துக்கொள்ளப்படவே இல்லை.முற்றிலும் ஸ்டெர்லைட்டை இயக்கவேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே ஆய்வு நடந்துள்ளது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.அதற்க்கு அவர்கள் பயன்படுத்திய சொற்கள் அனைத்துமே மக்கள் விரோதமானதுதான்.


இது எப்படி ஆய்வறிக்கையாக இருக்க முடியும்?

இது முழுக்க முழுக்க ஒரு சார்பான அறிக்கையாகத்தானே இருக்க முடியும்.


தருண் அகர்வால் அறிக்கையை விடதேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி கோயலின் நிலைப்பாடு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.


தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்ஆய்வுக் குழுவில் இடம்பெற்றால் தமிழகத்திற்கு சாதகமாக ஆய்வு 

இருக்கும் என்ற வாதத்தை ஏற்று ஆய்வுக்குழுவில் தமிழக நீதிபதியை இணைக்க மறுத்தது நீதிபதிகளுக்கு களங்கம் கற்பிக்கும் செயல். 

அது மட்டுமல்ல அக்குழுவுக்கு  ஸ்டெர்லைட் முதலாளி அணில் அகர்வால் மாநிலமான குஜராத்தை சேர்ந்த அவர் இனத்தைச் சேர்ந்த தருண் அகர்வால் என்றவரை தலைவராகவும் நியமித்தது 

இக்குழுவின் அறிக்கையை முன்னரே தமிழக மக்களுக்கு வெளிகாட்டிவிட்ட அநியாயம்.
இவர்கள்தான் வாய்கிழிய நியாயத்தைப்பேசுகிறார்கள்.
 
தற்போது ஆய்வுக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று சொல்லியிருப்பது அதைவிட மோசம்.
.

இது ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்கு வெளிப்படையாக ,ஆதரவாக தருண் அகர்வால் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஆதரவு அறிக்கையே அன்றி ஆய்வறிக்கையல்ல.
எனவே இதனை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...